
மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – IPL 2023 சீசனில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக களமிறங்கும் வீரர்?
நடப்பு IPL சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு மீண்டும் புதிய காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்த சீசனில் இடம்பெறுவாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.
ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்தியன் பிரீமியர் லீக்கில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றில் முதன் முறையாக இந்த சீசனில் வெறும் மூன்று வெற்றிகளை மட்டுமே குவித்து அட்டவணையின் கடைசியில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிக்கு இது போன்ற அதிர்ச்சிகரமான முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், ஹர்திக் பாண்ட்யாவை தக்கவைக்காதது, இஷான் கிஷான் மீது ஏலத்தில் அதிக தொகையை செலுத்தியது என பல விஷயங்கள் இந்த அணியின் தற்போதைய நிலைக்கு காரணமாகி விட்டது.
Exams Daily Mobile App Download
இது தவிர இந்த சீசனில் மும்பை அணி மிகவும் எதிர்பார்த்த ஜோஃப்ரா ஆர்ச்சர் கிடைக்கவில்லை என்பதும் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த கனவு சீசன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதால் ஜோஃப்ரா ஆர்ச்சரைப் பற்றிய அவர்களின் கேள்விக்குரிய முடிவு அடுத்த சீசனில் பலனளிக்கும் என்று மும்பை அணி நம்பியது. இதற்கிடையில் மும்பை அணிக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, மே 2021 முதல் காயம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் காயத்தால் பாதிக்கப்பட அவர் இங்கிலாந்தின் கோடைகால கிரிக்கெட்டில் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அடுத்த சீசனில் ஜோஃப்ரா ஆர்ச்சர் கிடைப்பாரா என்பது சந்தேகமாகி இருக்கிறது. இந்த நிலையில் 2023 IPL போட்டிகளில் இருந்து அவர் இருந்து நீக்கப்பட்டால், அவருக்கு மாற்றாக மூன்று சாத்தியமான வீரர்களை மும்பை அணி எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிட்செல் ஸ்டார்க்
பும்ரா-ஆர்ச்சர் பார்ட்னர்ஷிப்பை விட மும்பைக்கு சிறந்த ஒரே விஷயம் பும்ரா-ஸ்டார்க் ஜோடியாகும். தற்போது கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த வெள்ளை பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் இருந்து விலகினார். இருந்தாலும் அடுத்த சீசனில் அவர் பெரும்பாலும் IPL நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இருப்பார் என்று தெரிகிறது. அதனால், ஸ்டார்க் ஆர்ச்சருக்குப் பதிலாக டெத் ஓவரின் போது ரன்களை குறைப்பது போன்ற திறன்களுடன் மும்பைக்கு ஒரு முழுமையான வீரராக இருக்கலாம்
சாம் கர்ரன்
CSK ரசிகர்களின் விருப்பமான, இளம் ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் 2022 IPL ஏலத்தின் ஒரு பகுதியாக இல்லை. கடந்த 2021ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கு பின்பு எந்தவொரு கிரிக்கெட்டிலும் களமிறங்கவில்லை. தற்போது 23 வயதான கர்ரன் முதன்மையான ஒரு புதிய பந்து வீச்சாளர் ஆவார். அவரது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் திறன் நிச்சயமாக பயன்படும். அதனால் கீரன் பொல்லார்டு மற்றும் பாண்டியா சகோதரர்களின் இழப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் மும்பை அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனைகளை தணிக்கவும் அவர் உதவலாம்.
IPL 2022: இரவு 8 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டி – ரசிகர்கள் உற்சாகம்!
கேன் ரிச்சர்ட்சன்
மற்றொரு ஆஸ்திரேலிய டெத் பந்துவீச்சு நிபுணரான கேன் ரிச்சர்ட்சன் 2022 ஏலத்தில் விற்கப்படாமல் போனார். அனுபவம் வாய்ந்த அவர், ஸ்டார்க் மற்றும் கர்ரான் போன்றவர்களை விட மலிவான விலையில் செல்ல வாய்ப்புள்ளது. எனவே அவர் MI அணியின் அடுத்த சீசனுக்கான ரேடாரில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த சீசனில் மும்பை அணிக்காக அவ்வப்போது பும்ராவால் சரியாக செயல்பட முடியாததால், அவருக்கு மறுபக்கத்தில் இருந்து ஆதரவு கொடுக்கும் இடத்தில் கேன் ரிச்சர்ட்சன் இருக்கலாம்.