மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளேயிங் 11 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்?

0
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளேயிங் 11 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்?
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு - பிளேயிங் 11 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்?
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – பிளேயிங் 11 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்?

நடப்பு IPL சீசனின் இறுதி லீக் ஆட்டத்தில் இன்று (மே.21) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதும் மும்பை இந்தியன்ஸ் (MI) பிளேயிங் 11 அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

நடந்து வரும் 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) பிளேஆஃப் சுற்று பந்தயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணியான மும்பை இந்தியன்ஸ் இன்று தனது கடைசி ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை சந்திக்கிறது. இதுவரை 13 ஆட்டங்களில் வெறும் மூன்று வெற்றிகளுடன், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வகிக்கிறது. அந்த வகையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணிக்கு இந்த சீசன் மறக்க முடியாத போட்டியாக இருந்தாலும், இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ளும் போட்டியை வெற்றியுடன் முடிக்க விரும்புகிறது.

Exams Daily Mobile App Download

அதன்படி, வான்கடே மைதானத்தில் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் மும்பையின் பிளேயிங் 11 அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 2 சீசன்களாக மும்பை அணியின் ஒரு பகுதியாக இருந்தும், இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களமிறக்கப்படாத சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை மும்பை அணியில் பசில் தம்பி, ஹ்ரித்திக் ஷகீல், திலக் வர்மா, டெவால் ப்ரீவிஸ், மயங்க் மார்கண்டே உள்ளிட்ட ஏகப்பட்ட இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த சீசனில் மீண்டும் ‘தல’ தோனி!

அதே போல இன்று நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து SRHக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பிறகு ரோஹித் ஷர்மா பேசுகையில், ‘இதற்குப் பிறகு எங்களுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. அந்த ஆட்டத்தில் இன்னும் சில வீரர்களை முயற்சி செய்யலாம்’ என்று கூறி இருந்தார். இந்த சீசனில் இதுவரை 13 ஆட்டங்களில் சுமார் 22 வீரர்களை மும்பை பயன்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், மெகா ஏலத்தில் மும்பையால் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அர்ஜுன், ரிலே மெரிடித்தை மாற்ற வாய்ப்புள்ளது.

பிளேயிங் 11 அணி:

  • தொடக்க ஆட்டக்காரர்கள்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன்
  • மிடில் ஆர்டர்: திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • பவர்-ஹிட்டர்: டிம் டேவிட், டேனியல் சாம்ஸ்
  • சுழல்: சஞ்சய் யாதவ், மயங்க் மார்கண்டே
  • வேகம்: ரமன்தீப் சிங், அர்ஜுன் டெண்டுல்கர், ஜஸ்பிரித் பும்ரா
  • விளையாடும் XIல் மாற்றங்கள்: ரிலே மெரிடித்துக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கர்

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!