WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Multi Device Support அப்டேட்!

0
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Multi Device Support அப்டேட்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Multi Device Support அப்டேட்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Multi Device Support அப்டேட்!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிதாக மல்டி டிவைஸ் சப்போர்ட் என்னும் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சமானது முதலில் வலை மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மல்டி டிவைஸ் சப்போர்ட்:

வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது தளத்தை மேம்படுத்தி பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வந்தது. தற்போது இதை உறுதி செய்யும் வகையில் மார்க் சுக்கர்பெர்க் அவர்கள் விரைவில் மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அதிரடி சம்பள உயர்வு, திடீர் பதவி உயர்வு – அசர வைக்கும் ஐடி துறை!

மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் என்றால் ஒரே நேரத்தில் பல சாதனங்களில் தங்கள் வாட்ஸ் அப் கணக்கை பயனர்கள் பயன்படுத்த முடியும் என்பதே. அதாவது ஒரு தொலைபேசியுடன் இணைந்து கூடுதலாக 4 சாதனங்கள் என மொத்தம் ஒரே நேரத்தில் 5 சாதனங்களில் தங்கள் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த அம்சத்துக்கான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி இதனை சோதனை செய்யும் வகையில் முதற்கட்டமாக வலை, டெஸ்க்டாப் பயனர்களுக்கு மல்டி டிவைஸ் சப்போர்ட் அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. விரைவில் இந்த அம்சம் மேலே குறிப்பிட்ட பயனர்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அம்சத்தை பழைய வாட்ஸ் அப் பதிப்புகளை பயன்படுத்தும் பயனர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்றும் எனவே இரு தரப்பினரும் புதிய பதிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!