செயற்கை முறை கருவுறுதலில் தோல்வியடைந்த முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் சோகம்!

0
செயற்கை முறை கருவுறுதலில் தோல்வியடைந்த முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தில் சோகம்!
செயற்கை முறை கருவுறுதலில் தோல்வியடைந்த முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தில் சோகம்!
செயற்கை முறை கருவுறுதலில் தோல்வியடைந்த முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் சோகம்!

முல்லையின் சிகிச்சைக்காக குடும்பத்தினர்கள் கஷ்டப்பட்டு 5 லட்சத்தை ரெடி செய்துள்ளனர். இந்நிலையில், முல்லைக்கு செய்யப்பட்ட செயற்கை முறை கருவுறுதல் தோல்விடைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லைக்கு இயற்கையாக குழந்தை பிறக்காது என்பதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் கருவுறுதலை ஏற்படுத்த முடியும் என மருத்துவர் கூறுகிறார். ஆனால், இயற்கை முறை கருவுறுதலுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் வரை செலவாகும் எனவும் கூறி விடுகிறார்.

ExamsDaily Mobile App Download

பின்பு அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது என குடும்பத்தில் உள்ள அனைவரும் கவலையில் உள்ளனர். இதற்கு பிறகு மூர்த்தி ஒரு ஐடியா கூறுகிறார். அதாவது தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்திவிட்டு முல்லைக்கு சிகிச்சை செய்யலாம். சிகிச்சை முடிந்த பிறகு வேண்டுமானால் வீடு கட்டும் பிளானை மீண்டும் தொடங்கலாம் என கூறுகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த பிளானிற்கு ஒப்புக் கொண்டாலும் மீனா சுத்தமாக ஒப்புக்கொள்ளவில்லை.

மயங்கிய ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடியின் மகன் அர்ஷ்? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அதாவது அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை நான் எப்படி முல்லைக்காக மட்டும் விட்டுக் கொடுப்பது என கூறி சண்டை போடுகிறார். பிறகு எப்படியோ மூர்த்தியும் ஜீவாவும் சேர்ந்து ஐந்து லட்சத்தை ரெடி செய்கிறார்கள். ஆனால் இந்த சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என கூற முடியாது. ஒருவேளை இந்த சிகிச்சை தோல்வியடைந்தால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறுகிறார். இந்நிலையில், தற்போது முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை நடைபெற இருக்கிறது. முல்லையின் சிகிச்சை வெற்றி பெறுமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை தோல்வி அடைவது போல ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here