பரிகாரம் செய்துகொண்டிருந்த போதே மயங்கிய முல்லை – கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
Mullai fainted while doing reparation shock waiting for the ray
Mullai fainted while doing reparation shock waiting for the ray
பரிகாரம் செய்துகொண்டிருந்த போதே மயங்கிய முல்லை – கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பரிகாரம் செய்தாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாமல் முல்லை பரிகாரம் செய்கிறார். பின்பு பரிகாரம் செய்யும்போதே மயங்கி மருத்துவமனையில் சேர்க்கப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயம் தான் தற்போது மிக பெரிய பிரச்சனையாக வந்து நிற்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைய செலவாகும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்

அவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என அனைவரும் யோசித்து கொண்டிருந்த நேரத்தில் மூர்த்தி வீடு கட்டுவதை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என கூறிவிடுகிறார். யாருக்கும் இந்த யோசனை பிடிக்கவில்லை என்றாலும் குழந்தை வேண்டும் என்பதற்காக ஒப்பு கொள்கின்றனர். ஆனால், மீனாவிற்கு இந்த பிளான் சுத்தமாக பிடிக்கவே இல்லை. முல்லைக்கு தற்போது 25 வயது தான் ஆகிறது. இப்போதே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா என கண்டபடி பேசுகிறார்.

ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா, சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ!

இதற்கு பிறகு முல்லையிடம் ஒருவர் குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு பரிகாரம் செய் என்று சொல்கிறார். எப்படியும் மீனா செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க ஒப்புதல் கொடுக்க மாட்டார். இதனால் நாம் பரிகாரம் செய்யலாம் என முல்லை நினைக்கிறார். ஆனால், குடும்பத்தினர்கள் பரிகாரம் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. யாருக்கும் தெரியாமல் பரிகாரம் செய்ய கோவிலுக்கு செல்கிறார். பரிகாரம் செய்துகொண்டிருக்கும் நேரத்திலேயே மயங்கி விழுகிறார். கதிர் முல்லையை திட்டிக்கொண்டே மருத்துவமனைக்கு கூட்டி செல்கிறார். முல்லையை பரிசோதித்து பார்த்த மருத்துவர் முல்லை கர்ப்பமாக இருப்பதாக கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!