‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? சினிமா பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? சினிமா பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? சினிமா பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் முல்லை காவ்யா? சினிமா பிரவேசம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து வரும் நடிகை காவ்யா தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், இவர் சீரியலில் தொடரமாட்டாரா என்று ரசிகர்கள் வலைதளங்களில் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

நடிகை காவ்யா

குறும்படங்கள், மாடலிங் துறை மூலம் மீடியாவுக்குள் தடம் பதித்த நடிகை காவ்யா விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வழியாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருந்தார். மக்களின் பேராதரவை பெற்றிருந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதிக்கு அக்காவாக, அறிவுமணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகை காவ்யாவுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்திருந்தது. இதனையடுத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து வந்த நடிகை சித்ரா மரணமடைந்த நிலையில், இவருக்கு பதிலாக புதிய முல்லையாக அறிமுகமானார் காவ்யா.

இந்த சீரியலும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு ரீச்சை கொடுத்தது. இதன் மூலம் நடிகை காவ்யா தமிழ் சின்னத்திரையை ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் நடிகை காவ்யாவுக்கு சமீப காலமாக வெள்ளித்திரை பட வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இளையதளபதி நடிகர் விஜயின் ‘பிகில்’ திரைப்படத்தில் நடிக்க காவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்திருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அவரால் இத்திரைப்படத்தில் தொடர முடியவில்லை.

இதனை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லையாக தொடர்ந்து வந்த நடிகை காவ்யா தற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதாவது நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய படத்தில் நடிக்க காவ்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதே போல இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில், நடிகர் கவின் நடித்து வரும் ‘ஊர்க்குருவி’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் காவ்யா.

தமிழகத்தில் நாளை (ஜன.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி வரும் ‘ரிப்பப்பரி’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் காவ்யா. இது தவிர வெப் தொடரிலும் நடித்து வருகிறார் இவர். இப்படி வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் காவ்யா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லையாக தொடருவரா என்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!