முகாலாயப் பேரரசு

0
முகாலாயப் பேரரசு

அரசியல் வரலாறு

பாபர் (1526 – 1530)

            இந்தியாவில் முகலாயப்பேரரசை நிறுவியவர் பாபர். அவரது இயற்பெயர் சாகிருதீன் முகமது. தனது தந்தை வழியில் தைமூருக்கும், தாய் வழியில் செங்கிஸ்கானுக்கும் உறவினர். பாபர் தனது தந்தை உமர் ஷேக் மீர்சாவின் பர்கானாவிற்கு வாரிசாகப் பொறுப்பேற்றார். ஆனால் அவரது தூரத்;து உறவினர் ஒருவரால் அது தட்டிப்பறிக்கப்படவே பாபர் தனது ஆட்சிப்பகுதியை இழந்தார். சிறிது காலம் நாடோடியாகத் திரிந்த அவர், தனது மாமன்கள் ஒருவரிடமிருந்து காபூலைக் கைப்பற்றினார். பின்னர், இந்தியாவைக் கைப்பற்றும் ஆசையை வளர்த்துக் கொண்ட பாபர், 1519 முதல் 1523 வரையிலான காலத்தில் நான்கு படையெடுப்புகளையும் மேற்கொண்டார்.

போர் வெற்றிகள்

  • பாபர் படையெடுத்தபோது இந்தியாவில் ஐந்து முக்கிய முஸ்லிம் அரசுகளும் – டெல்லி, குஜராத், மாளவம், வங்காளம், தக்காணம், இரண்டு முக்கிய இந்து அரசுகளும் –  மேவாரின் ராண சங்கா மற்றும் விஜய நகரப் பேரரசு இருந்தன.
  • 1525 ஆம் ஆண்டு, காபூலிருந்து பாபர் மீண்டும் இந்தியா மீதான படையெடுப்பைத் தொடர்ந்தார். லாகூரின் ஆளுநராக இருந்த தௌலத்கான் லோடியை எளிதில் முறியடித்து அப்பகுதியைக் கைப்பற்றினார். பின்னர், டெல்லி நோக்கி முன்னேறினார்.
  • 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் நடைபெற்ற முதலாம் பானிப்பட்டுப் போரில் பாபர் இப்ராஹிம் லோடியை முறியடித்தார். போரில் லோடி கொல்லப்பட்டார்.
  • பாபரிடமிருந்த குதிரைப் படையும் பீரங்கிப்படையுமே அவரது வெற்றிக்கு வழிவகுத்தன. டெல்லியைக் கைபற்றிய பாபர் தனது மகன் உமாயூனை ஆக்ராவைக்கைப்பற்றுவதற்காக அனுப்பிவைத்தார். பாபர் தம்மை “இந்துஸ்தானத்தின் பேரரசர்” என்று அறிவித்துக் கொண்டார்.
  • ராணா சங்கா மற்றும் ஆப்கானியர்கள் மீது அவர் கொண்ட வெற்றிகள் அவரை இந்தியாவின் உண்மையான ஆட்சியாளராக்கின. மேவாரின் ராணா சங்கா ஒரு சிறந்த ராஜபுத்திர வீரர். அவர்
  • பாபருக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1527 ஆம் ஆண்டு ஆக்ராவிற்கு அருகில் நடைபெற்ற கானுவாப் போரில் பாபர் அவரை முறியடித்தார். இந்த வெற்றிக்குப் பிறகு பாபர் காஸி என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
  • 1528 ஆம் ஆண்டு மற்றொரு ராஜபுத்திர ஆட்சியாளரான மேதினி ராய் என்பவரிடதிருந்து பாபர் சந்தேரியைக் கைப்பற்றினார். அதற்கெடுத்த ஆண்டில் பீகாரில் நடைபெற்ற கோக்ரா போரில் பாபர் ஆப்கன்களை முறியடித்தார்.
  • இந்த வெற்றிகளினால் பாபர் இந்தியாவில் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்தினார். 1530ல் தமது நாற்பத்தி ஏழாவது வயதில் ஆக்ராவில் பாபர் மறைந்தார்.

பாபர் பற்றிய ஒரு மதிப்பீடு

  • பாபர் ஒரு சிறந்த ஆட்சியாளர். நிலைத்த சாதனைகளை நிகழ்த்தியவர். அரபு மற்றும் பாரசீக மொழிகளில்; புலமை மிக்கவர்.
  • துருக்கி மொழியே அவரது தாய்மொழி. துசுகி பாபரி என்ற அவரது நினைவுக் குறிப்புகள் துருக்கி மொழியில் எழுதப்பட்டதாகும். இந்தியாவைப் பற்றிய வருணனைகள் அதில் இடம் பெற்றுள்ளன. எந்த உண்மையையும் மறைக்காமல், தான் பெற்ற தோல்விகளையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
  • இயற்கையை ரசிக்;கும் உள்ளத்தவரான அவர் இந்தியாவின் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றியும்கூட தமது நினைவுக் குறிப்புகளில் விவரித்துள்ளார்.

உமாயூன் (1530 – 1540)

  • பாபரின் மூத்த மகன் உமாயூன் . உமாயூன் என்றால் ‘நல்வாய்ப்பு’ என்று பொருள். ஆனால் ‘முகலாயப் பேரரசில் நல்வாய்ப்புகளைப் பெறாத மன்னராக அவர் இருந்தார்.
  • உமாயூனுக்கு கம்ரான், அஸ்காரி, ஹிண்டால் என்ற மூன்று சகோதரர்கள். உமாயூன் பேரரசை தனது சகோதரர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார். ஆனால், அதுவே அவருக்கு பெரும் சோதனையாக முடிந்தது.
  • காபூல் மற்றும் காண்டஹாரின் ஆட்சியாளராக கம்ரான் நியமிக்கப்பட்டார். சாம்பல் மற்றும் ஆல்வார் பகுதிகள் அஸ்காரிக்கும் ஹிண்டாலுக்கும் அளிக்கப்பட்டன.
  • கிழக்கில் உமாயூன் ஆப்கன்களை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்த போது, குஜராத்தின் பக்தூர் ஷா டெல்லி நோக்கி படையெடுத்து வரும் செய்தி அவருக்கு கிட்டியது. எனவே, ஆப்கானியர்களின் தலைவரான ஷெர்கானுடன் (வருங்கால ஷெர்ஷா) அவசரமாக ஒரு உடன்படிக்கையை செய்து கொண்ட உமாயூன் குஜராத் நோக்கிப் புறப்பட்டார்.
  • உமாயூன் பகதூர்ஸாவிடமிருந்து குஜராத்தைக் கைப்பற்றி தனது சகோதரர் அஸ்காரியை அங்கு ஆளுநராக நியமித்தார். ஆனால், பகதூர் ஷா அஸ்காரியை விரட்டிவிட்டு மீண்டும் குஜராத்தைக் கைபற்றி கொண்டார். இதற்கிடையில், உமாயூன் அவரக்கெதிராக மீண்டும் போர் தொடுத்தார்.
  • 1539 ஆம் ஆண்டு நடைபெற்ற சௌசா போரில் ஷெர்கான் முகாலாயப்படைகளை நசுக்கினார்.
  • உமாயூன் போர்க்களத்திலிருந்து தப்பி ஆக்ராவுக்கு சென்றார். அங்கிருந்தபடியே தனது சகோதரர்களின் உதவியை உமாயூன் நாடினார். ஆனால், சகோரர்கள் ஒத்துழைக்க மறுக்கவே, உமாயூன் மீண்டும் தனியாகவே ஷெர்காளை எதிர்கொண்டார்.
  • 1540 ல் பில்கிராம் போர் நடைபெற்றது. இது கனோஜ் போர் எனவும் அழைக்கப்படுகிறது. இப்போரில் ஷெர்கான் உமாயூனை மீண்டும் முறியடித்தார்.
  • நாடிழந்த உமாயூன் அடுத்த பதினைந்து ஆண்டுகள் இந்தியாவுக்கு வெளியே வாழ நேர்ந்தது.

சூர் இடைவெளி (1540 – 1555)

  • சூர்மரபை தோற்றுவித்தவர் ஷெர்ஷா. அவரது இயற்;பெயர் பரீத். பீகாரிலுள்ள சசாரம் என்ற பகுதியின் ஜாகீர்தாரான ஹசன்கான் என்பவரின் மகன்.
  • பின்னர், பரீத் பீகாரின் ஆப்கானிய ஆட்சியாளரிடம் பணிபுரிந்தார். பரித்தின் வீரச் செயலைப் பாராட்டியே அந்த ஆப்கானிய ஆட்சியாளர் ஷெர்கான் என்ற பட்டத்தை அளித்தார்.
  • ஷெர்கான் சௌசாப் போரில் உமாயூனைத் தோற்கடித்தார் என்பதை ஏற்கனவே கண்டோம். 1540ல் ஷெர்கான் ஷெர்வா என்ற பட்டத்தோடு டெல்லியின் ஆட்சியாளரானார்.

ஷெர்ஷா சூர் (1540 – 1545)

  • ஷெர்ஷா, ராஜபுத்திர்களுடன் பலமுறை போரிட்டு தனது பேரரசை விரிவுபடுத்திக்   கொண்டார்.
  • பஞ்சாப், மாளவம், சிந்து, முல்தான், பண்டேல்கண்ட் போன்றவை அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
  • அஸ்ஸாம், நேபாளம், காஷ்மீர், குஜராத் தவிர ஏனைய வட இந்தியா முழுவதையும் கொண்டதாக ஷெர்ஷாவின் பேரரசு விளங்கியது

ஷெர்ஷாவின் ஆட்சி முறை

  • குறுகிய ஐந்து ஆண்டுகளே ஆட்சியிலிருந்தாலும், ஷெர்ஷா ஒரு சிறந்த ஆட்சிமுறையை உருவாக்கியிருந்தார். மத்திய அரசில் பல்வேறு துறைகள் இருந்தன. அரசருக்கு உதவியாக நான்கு முக்கிய அமைச்சர்கள் இருந்தனர்.
  1. திவானி விசாரத் – வாசிர் என்றும் இவர் அழைக்கப்பட்டார். – வருவாய் மற்றும் நிதிநிர்வாகம்
  2. திவானி அரிஸ் – படைத்துறை
  3. திவானி ரஸலத் – அயலுறவுத்துறை
  4. திவானி இன்ஷா – தகவல் தொடர்புத்துறை
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
  • ஷெர்ஷாவின் பேரரசு நாற்பத்தியேழு சர்க்கார்களாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சர்க்காரிலும் முதன்மை ஷிக்தார் (சட்டம் ஒழுங்கு), முதன்மை முன்சீப் (நீதி வழங்குதல்) என்ற இரண்டு முக்கிய அதிகாரிகள் இருந்தனர்.
  • ஒவ்வொரு சர்க்காரும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஷிக்தார் (ராணுவ அதிகாரி), அமின் (நிலவருவாய்), பொடேதார் (கருவூல அதிகாரி), கர்கூன்கள் (கணக்கர்கள்) ஆகிய அதிகாரிகள் பர்கானா நிர்வாகத்தை கவனித்து வந்தனர். பேரரசில் இக்தா என்றழைக்கப்பட்ட நிர்வாகப்பிரிவுகளும் இருந்தன.
  • ஷெர்ஷாவின் ஆட்சிக்காலத்தில் நிலவருவாய் நிர்வாகம் நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. நிலங்கள் கவனமாக அளக்கப்பட்டன.
  • விளைநிலங்கள் அனைத்தும் நல்லவை, நடுத்தரமானவை, மோசமானவை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன. சாதாலரணமாக சராசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
  • பணமாகவோ அல்லது விளை பொருளாகவோ நிலவரி பெறப்பட்டது. ஷெர்ஷாவின் நிலவருவாய் சீர்த்திருத்தங்களினால் நாட்டின் வருவாய் பெருகிறது.
  • ‘தாம்’ என்ற புதிய வெள்ளி நாணயங்களை ஷெர்ஷா அறிமுகப்படுத்தினார். அவை 1835 ஆம் ஆண்டு வரை கூட புழக்கத்திலிருந்தன.
  • நான்கு முக்கிய பெருவழிச் சாலைகளை அமைத்து போக்குவரத்து வசதிகளை ஷெர்ஷா மேம்படுத்தினார்.
  • அவையாவன: 1.சோனார்கான் முதல் சிந்து வரை 2) ஆக்ரா முதல் புர்ஹாம்பூர் வரை 3) ஜோத்பூர் முதல் சித்தூர் வரை 4) லாகூர் முதல் முல்தான் வரை. பயணிகளின் வசதிக்காக பெருவழிச் சாலைகளில் ஆங்காங்கே தங்குமிடங்களும் அமைக்கப்பட்டன.
  • காவல்துறை மிகவும் திறமையான சீரமைக்கப்பட்டிருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் குற்றங்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டன.
  • படைத்துறை நிர்வாகமும் திறமையான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. அலாவுதின் கில்ஜியின் குதிரைகளுக்கு சூடுபோடுதல் போன்ற நடைமுறைகளை ஷெர்ஷா பின்பற்றினார்.

ஷெர்ஷா பற்றிய ஒரு மதிப்பீடு   

  • ஷெர்ஷா ஒரு பண்புமிக்க முஸ்லீமாகத் திகழ்ந்தார். பொதுவாக, பிற சமயப்பிரிவுகளை சகிப்புத்தன்மையுடன் நடத்தினார். இந்துக்;களுக்கு முக்கிய பதவிகளை அளித்தார்.
  • கலை, கட்டிடக்கலையையும் அவர் ஆதரித்தார். டெல்லிக்கு அருகில் யமுனை நதிக்கரையில் ஷெர்ஷா ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்தார். அதில், தற்போது புராண கிலா என்ற பழைய கோட்டையும் அதனுள் ஒரு மசூதியும் மட்டுமே எஞ்சியுள்ளன.
  • சசாரத்தில் ஒரு கல்லறை மாடத்தையும் அவர் கட்டினார். இந்தியக் கட்டிடக் கலையின் அமைப்புகளில் சிறந்தவற்றில் ஒன்றாக அது கருதப்படுகிறது. கற்றோரையும் ஷெர்ஷா ஆதரித்தார். அவரது ஆட்சிக்காலத்தில் மாலிக் முகமது ஜெயசி என்பவர் புகழ்வாய்ந்த இந்தி நூலான பத்மாவத் என்ற நூலைப்படைத்தார்.
  • ஷெர்ஷாவின் மறைவுக்குப்பிறகு அவரது வாரிசுகள் 1555 ஆம் ஆண்டு உமாயூன் மீண்டும் இந்தியாவைக் கைப்பற்றும் வரை ஆட்சியில் தொடர்ந்தனர்.

உமாயூன் (1555 – 1556)

  • 1540 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து புறப்பட்ட உமாயூன் சிந்துவுக்கு செல்லும் வழியில் ஹமீதா பானு பேகம் என்பவரை மணந்தார். அவர்கள் அமர்கோட் என்ற இடத்தில் ஒரு இந்து அரசரான ராணாபிரசாத் என்பவரது ஆதரவில் வாழ்ந்து வந்தபோது 1542 ல் அக்பர் பிறந்தார்.
  • பின்னர், ஈரானுக்கு சென்ற உமாயூன் அந்நாட்டு ஆட்சியாளரிடம் உதவிகோரி பெற்றார். கம்ரான், அஸ்காரி என்ற இரண்டு சகோதரர்களையும் உமாயூன் முறியடித்தார்.
  • இதற்கிடையில் இந்தியாவில் சூர் மரபினரின் ஆட்சியும் வேகமாக சீர்குலைந்தது.
  • 1555 ஆம் ஆண்டு ஆப்கன்களை முறியடித்து உமாயூன் மீண்டும் முகலாய அரியணையைக் கைப்பற்றினார். ஆறுமாத காலத்திற்குப் பிறகு, 1556 – ல் உமாயூன் தனது நூலகப்படிக்கட்டில் தடுக்கி விழுந்து உயிர்நீத்தார்.
  • உமாயூன் ஒரு சிறந்த படைத்தளபதியாகவேர், போர் வீரராகவோ இல்லையென்றாலும், அன்பும் கருணையும் அவரிடம் குடிகொண்டிருந்தன.
  • கல்விமானாகவும் அவர் திகழ்ந்தார். கணிதம், வான இயல், ஜோதிடம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்.
  • ஓவியக்கலை அவருக்குப்பிடித்த ஒன்று பாரசீக மொழியில் அவர் கவிதைகளையும் புனைந்தார்.

அக்பர் (1556 – 1605)

  • இந்தியாவின் தலைசிறந்த பேரரசர்களில் அக்பரும் ஒருவர். தனது தந்தை உமாயுனின்; மறைவுக்குப்பிறகு அவர் அரியணைNறினார். ஆனாலும், டெல்லியை ஆப்கன்கள் கைப்பற்றிக் கொண்டதால் அவரது நிலை ஆபத்தானதாகவே இருந்தது.
  • ஆப்கன்களின் படைத்தலைவர் ஹெமுடெல்லியைத்தம் வசம் வைத்திருந்தர். 1556 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் பானிப்பட்டுப் போரில், ஹெமு வெற்றியின் விளிம்புவரை சென்றுவிட்டார். ஆனால், அவரது கண்ணில் அம்பு பாய்ந்ததால் மயக்கமானார். துலைவனில்லாத அவரது படை சிதறி ஓடியது. அதிர்ஷடம் அக்பரின் பக்கம் இருந்ததால். அவரது வெற்றி உறுதிப் படுத்தப்பட்டது.
  • அக்பரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின்போது பைராம்கான் அவருக்கு அரசப்பிரதியாக செயல்பட்டார். முகலாயப் பேரரசை ஒருங்கிணைத்த பெருமை பைராம்கானேயே சாரும.
  • ஐந்தாண்டுகளுக்குப்பிறகு, அரசவைப் பூசல்களின் விளைவாக அக்பர் அவரைப் பதவியிலிருந்து நீக்கி, மெக்காவிற்கு செல்லும்படி பணிந்தார். ஆனால், மெக்கா செல்லும் வழியிலேயே ஆப்கன் ஒருவனால் அவர் கொல்லப்பட்டார்.
  • அக்பரது ராணுவவெற்றிகள் பல ஆக்ரா முதல் குஜராத் வரையும், பின்னர் ஆக்ரா முதல் வங்காளம் வரையும் என வட இந்தியா முழுதையும் அக்பர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
  • வடமேற்கு எல்லைப் புறத்தையும் அவர் வலிமைப்படுத்தினார் பின்னர் அவரது கவனம் தக்காணத்தின் பக்கமும் திரும்பியது

ராஜபுத்திரர்களுடன் கொண்டிருந்த உறவுகள்

  • அக்பரின் ராஜபுத்திரக்கொள்கை குறிப்பிடத்தக்கது. அவர் ராஜபுத்திர இளவரசியான ராஜா பாரமஹாலின் மகளை மணந்து கொண்டார். முகலாயர் வரலாற்றில் அந்த நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாகும்.
  • ராஜபுத்திரர்கள்; நான்கு தலைமுறைகள் முகலாயர்களுக்கு சேவையாற்றினர். பலர் படைத்;தளபதி பதவி வரை பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்றனர்.
  • அக்பரது ஆட்சியில், ராஜா பகவான்தாஸ், ராஜா மன்சிங் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்பட்டன. ஒருவர்பின் ஒருவராக ராஜபுத்திர அரசுகளும் அக்பரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டன.
  • ஆனால், மேவாரின் ராணாக்கள் மட்டும், பலமுறை தோல்விகளைத் தழுவுpய போதிலும், அடிபணிய மறுத்தனர்.
  • 1576 ஆம் ஆண்டு ஹால்திகாட் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மன்சிங் தலைமையிலான முகலாயப் படைகள் ராணா பிரதாப் சிங்கை முறியடித்தன. மேவாரின் இத்தோல்விக்குப் பிறகு, பெரும்பாலான ராஜர்த்திர ஆட்சியாளர்கள் அக்பரின் மேலாண்மைக்கு அடிபணிந்தார்.
  • அக்பரது ராஜபுத்திரக் கொள்கை அவரது பரந்த சமயக் கொள்கையைத் தழுவியே இருந்தது. புனிதப்பயணவரியையும், பின்னர் ஜிசியா வரியையும் அவர் ரத்து செய்தார்.
  • அக்பரின் ராஜபுத்திரக் கொள்கை முகலாயப் பேரரசு, ராஜபுத்திரர்கள் இருசாருக்கும் சாதகமாகவே இருந்தது. மிகச் சிறந்த போர்வீரர்களின் சேவை முகலாயர்களுக்கு கிடைத்தது.
  • மறுபுறம், ராஜஸ்தான் பகுதியில் அமைதி நிலவியது, முகலாயப் பணியில் சேர்ந்த ராஜபுத்திரர்கள் உயர்பதவிகளையும் அடைந்தனர்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

சமயக் கொள்கை

  • வரலாற்றின் ஏடுகளில் அக்பர் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதற்கு காரணம் அவரது சமயக் கொள்கையேயாகும். அக்பரின் சமயக் கருத்துக்களுக்கு பல்வேறு காரணிகள் துணைபுரிந்தன.
  • தொடக்க காலத்தில் அவர் சூஃபித்துறவிகளுடன் கொண்டிருந்த உறவுகள், அவரது ஆசான் அப்துல் லத்தீபின் போதனைகள், ராஜபுத்திரப் பெண்களை அவர் திருமணம் செய்து கொண்டது, ஷேக் முபாரக் மற்றும் அவரது புதல்வர்களான அபுல்இ பெய்சிஇ அபுல் பசல் போன்ற அறிஞர்களுடன் அவரது  தொடர்புகள், இந்துஸ்தானத்தில ஒரு பேரரசை நிறுவ வேண்டும் என்ற ஆசை போன்றவை அவரது சமய கருத்;துக்களுக்கு அடிப்படையாக அமைந்தன.
  • அக்பர் தொடக்கத்தில் ஒரு கடமை தவறாத முஸ்லீமாகவே இருந்தார். ஆம்பர் நாட்டு இளவரசி ஜோத்பாயை மணந்த பின்னர் அவர் புனிதப் பயணவரியை ரத்து செய்தார்.
  • 1562ல் ஜிசியா வரியையும் ரத்து செய்தார். தனது இந்து மனைவியர் விருப்பம்போல் தங்களது கடவுளரை வழிபட அனுமதித்தார். பின்னர், அவர் இஸ்லாமிய சமயத்தின் மீது ஐயுறவு கொண்டார்.
  • 1575ல், அக்பர் தனது புதிய தலைவரான பதேபூர் சிக்hயில் இபாதத் கானா என்ற வழிபாட்டு கூடத்தை அமைத்தார்.
  • இந்து சமயம், சமண சமயம், கிறித்துவ சமயம், ஸொராஸ்டிரிய சமயம் போன்ற அனைத்து சமய அறிஞர்களையும் அங்கு அழைத்து விவாதிக்க செய்தார்.
  • அரசியல் விவகாரங்களில் முஸ்லிம் உலேமாக்கள் தலையிடுவதையும் அவர் வெறுத்தார். 1579ல் அக்;பர் “தவறுபடா ஆணையை” வெளியிட்டு தமது சமய அதிகாரங்களை உறுதிப்படுத்தினார்.
  • 1582ல் அக்பர் ‘தீன் இலாஹி’ அல்லது ‘இறைநம்பிக்கை’ என்ற தமது புதிய சமயத்தை அறிவித்தார். அது ஒரு கடவுள் ‘கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டதாகும்.
  • அனைத்து சமயங்களின் நல்ல கருத்துக்களையும் உள்ளடக்கியதாக அது காணப்பட்டது. பகுத்தறிவே அதன் அடிப்படை. மூடநம்பிக்கைகளை அது ஆதரிக்கவில்லை.
  • பல்வேறு சமயங்களுக்கிடையே காணப்படும் வேறுபாடுகளுக்கு ஒரு பாலமாகவும் அது அமைந்தது. இருப்பினும், அக்பரது புதிய சமயம் தோல்வியே கண்டது. அவரது மறைவுக்குப்பிறகு அது சிதைந்துபோயிற்று.
  • அக்பரது வாழ்நாளிலே கூட பீர்பால் உள்ளிட்ட பதினைந்து பேர்களே அக்கோட்பாட்டைப் பின்பற்றினர். அக்பர் தனது புதிய கோட்பாட்டை ஏற்கும்படி எவரையும் வலியுறுத்தவில்லை.

நிலவருவாய் நிர்வாகம்

  • ராஜா தோடர்மால், அக்பரது ஆட்சிக்காலத்தில் நிலவருவாய் நிர்வாகத்தில் சில ஆய்வுகளை மேற்கொண்டார். அக்பரது நிலவருவாய் முறை ஜப்தி அல்லது பந்தோபஸ்து முறை என அழைக்கப்பட்டது.
  • ராஜா தோடர்மால் அதனை மேலும் சீரமைத்தார். அதற்கு தாஹாசாலா முறை எனப்பெயர். 1580ல் அது நிறைவேற்;றப்பட்டது. அம்முறைப்படி, தோடர்மால் ஒரேமாதிரியான நில அளவையை அறிமுகப்படுத்தினார்.
  • கடந்த பத்தாண்டு காலத்தில் விளைச்சலின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு நிலவருவாய் நிர்ணயிக்கப்பட்டது.
  • நிலங்கள் நான்கு வகைகளாகப் பிரிக்கப்ப்ட்டன
  1. போலஜ் (ஆண்டு தோறும் பயிரிடப்படும் நிலம்)
  2. பரௌதி (இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது)
  3. சச்சார் (மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது)
  4. பஞ்சார் (ஐந்து அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது).
  • நிலவரி பொதுவாக பணமாகவே செலுத்தப்பட்டது.

மேலும் படிக்க கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்…

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!