விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த முகேன் ராவ், கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த முகேன் ராவ், கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த முகேன் ராவ், கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுத்த முகேன் ராவ், கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்!

டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விஜய் டிவியில் கிறிஸ்துமஸ் தின சிறப்பு கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் விஜய் டிவியின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

சிறப்பு நிகழ்ச்சி:

பண்டிகை நாட்களில் கொண்டாட்டம் என்பது தற்போதைய காலத்தில் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகளை காண்பது இல்லாமல் முழுமை அடைவது இல்லை. அந்த அளவிற்கு அனைத்து சேனல்களிலும் வித விதமாக நிகழ்ச்சிகள் மற்றும் புதிய திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகின்றனர். ரேட்டிங் வரிசையில் அதிக போட்டிகள் நிலவுவதால் அதிக ரசிகர்களை தங்கள் வசம் இழுக்க அனைத்து சேனல்களும் புது கான்செப்டுகளை யோசித்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் என்றாலே நேரம் போவது தெரியாமல் மிகவும் கலகலப்பாக இருக்கும்.

கொலை செய்யப்பட்ட விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீரின் அம்மா இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

சீரியல் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்தோடு மிகவும் ஜாலியாக இருக்கும். தற்போது டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிறது. அன்றைய தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்று விஜய் டிவியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தொகுப்பாளராக ஈரோடு மகேஷ் மற்றும் மணிமேகலை உள்ளனர். பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் ராவ் இந்த நிகழ்ச்சில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலந்து கொண்டு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் குரலில், ரசிகர்களின் ஃபேவரிட் ஆன சத்தியமா நா சொல்லுறேன் டி பாடலை பாடி அசத்தியுள்ளார்.

TRP ரேட்டிங்கில் மீண்டும் முதலிடம் பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

கிரேஸ் கருணாஸ், அறந்தாங்கி நிஷா, பாக்கியலட்சுமி எழில், சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள், கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள், விஜே அர்ச்சனா கலந்து கொண்டுள்ளனர். மேலும் முக்கியமாக பிரசவ ஓய்வில் இருந்து வரும் பாரதி கண்ணம்மா நடிகை வெண்பா அவரும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் சேனலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் இந்த நிகழ்ச்சிக்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இரு குழுக்களாக பிரிந்து போட்டி போட்டுக் கொண்டு பிரபலங்கள் நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!