ரூ.25,000 ஊதியத்தில் MS பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.25,000 ஊதியத்தில் MS பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.25,000 ஊதியத்தில் MS பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!

ரூ.25,000 ஊதியத்தில் MS பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (MS University) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Technical Assistant & Project Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பில், Technical Assistant பணிக்கு 2 பணியிடங்கள் மற்றும் Project Assistant பணிக்கு 3 பணியிடங்கள் என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதித்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் PhD / M.Sc / Diploma ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பில் பார்க்கவும்.

  • 01.07.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 38 வயது என வயது தளர்வுகளுடன் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MS University விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.04.2022 ம் தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here