விஜய் டிவியில் மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை தீபா, சங்கர் – ரசிகர்கள் பாராட்டு!

0
விஜய் டிவியில் மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை தீபா, சங்கர் - ரசிகர்கள் பாராட்டு!
விஜய் டிவியில் மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை தீபா, சங்கர் - ரசிகர்கள் பாராட்டு!
விஜய் டிவியில் மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை தீபா, சங்கர் – ரசிகர்கள் பாராட்டு!

விஜய் டிவி குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தீபா சங்கர். அவர் தற்போது Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொள்கிறார். இந்த வாரம் அந்த போட்டியில் அவர் புது கெட்டப்பில் கலக்கி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகை தீபா சங்கர்:

தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை தீபா சங்கர். பல தமிழ் படங்களில் அவர் நடித்திருந்தாலும் விஜய் டிவி குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவரது வெகுளித்தனம் கலந்த நகைச்சுவை பேச்சை ரசிக்காதவர்களே இல்லை. அந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் மட்டுமல்லாமல், சக போட்டியாளர்களும், நடுவர்களும் கூட அவரது பேச்சை ரசிப்பார்கள். வெள்ளித்திரையில் வெளியான நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கத்தில் அவரின் அக்காவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் ஈர்த்தார்.

செப்.1 முதல் ஒரு பை நாணயத்திற்கு 65 ரூபாய் ஊக்கத்தொகை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

சிறு வயதிலிருந்தே சீரியல்களில் தீபா நடித்து வரும் விஷயம் ஒரு சிலருக்கே தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்த தீபா சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியில் “காமெடி ராஜா கலக்கல் ராணி”, Mr & Mrs சின்னத்திரை உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

தற்போது ஒளிபரப்பில் உள்ள Mr & Mrs சின்னத்திரை சீசன் 3-யில் தீபாவும் அவரது கணவர் சங்கரும் இந்த வார எபிசோடில் புதிய கெட்டப்பில் களமிறங்கி உள்ளனர். அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளிட்டார். ஆனால் உண்மையாகவே இது அவர் தானா என ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். மேலும் மாடர்ன் உடையில் இருக்கும் நடிகை தீபாவின் போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!