அக்.10 இல் எம்பில், பிஎச்டி நுழைவுத்தோ்வு – காமராஜர் பல்கலை அறிவிப்பு!

0
அக்.10 இல் எம்பில், பிஎச்டி நுழைவுத்தோ்வு - காமராஜர் பல்கலை அறிவிப்பு!
அக்.10 இல் எம்பில், பிஎச்டி நுழைவுத்தோ்வு - காமராஜர் பல்கலை அறிவிப்பு!
அக்.10 இல் எம்பில், பிஎச்டி நுழைவுத்தோ்வு – காமராஜர் பல்கலை அறிவிப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த விவரங்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் வி.எஸ். வசந்தா கூறியுள்ளார்.

நுழைவுத்தேர்வு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகள் இயங்கி வருகிறது. அதன் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பல்வேறு கல்லூரிகளில் எம்பில் மற்றும் பிஎச்டி பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன. காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்ட ஆய்வு (எம்பில்), முனைவர் பட்டம் (பிஎச்டி) படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த படிப்புகளுக்கு ஆண்டுதோறும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

IPL 2021 : வாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்! SRH vs PBKS இன்று பலப்பரீட்சை!

இதன்படி 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறுகிறது.நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 9ம் தேதி வரை பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வானது அக்டோபர் 10-ஆம் தேதி காலை 9 முதல் 11 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – தேடி வரும் உணவு! இலவச எண் வெளியீடு!

அதனை தொடர்ந்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தனி இணைய முகவரியில் இருந்து தோ்வுக்கு ஒரு வாரம் முன்னதாக நுழைவு சீட்டு அனுப்பப்படும். நுழைவு சீட்டு இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் வி.எஸ். வசந்தா கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!