இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு உத்தரவு – வெடித்த புதிய சர்ச்சை! எம்பி கண்டனம்!

1
இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு உத்தரவு - வெடித்த புதிய சர்ச்சை! எம்பி கண்டனம்!
இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு உத்தரவு - வெடித்த புதிய சர்ச்சை! எம்பி கண்டனம்!
இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு உத்தரவு – வெடித்த புதிய சர்ச்சை! எம்பி கண்டனம்!

தெற்கு ரயில்வே வாரியம் தற்போது உத்தரபிரதேசத்தில் போட்டி தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றவர்களை தமிழகத்தில் நியமித்து விட்டு சென்னையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று நாடாளுமன்ற எம்பி வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெற்கு ரயில்வே

ரயில்வே துறையில் பணிபுரிய ஒவ்வொரு முறையும் அந்தந்த தேர்வு வாரியம் தேர்வர்களுக்கு தேர்வுகளை வைத்து பணிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கோரக்பூர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்ற 54 விண்ணப்பத்தார்களை தெற்கு ரயில்வே வாரியம் தமிழகத்தில் நியமிக்க உத்தரவு பிறப்பித்து விட்டு, சென்னையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. இதனை எதிர்த்து நாடாளுமன்ற எம்பி வெங்கடேசன் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘தெற்கு ரயில்வே கடந்த சில நாட்களுக்கு முன்பாக உதவி ஓட்டுநர் பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறி இருந்தது.

IPL 2021 – CSK vs KKR : டாஸ் வென்றது கொல்கத்தா! பேட்டிங் தேர்வு!

இந்நிலையில், இந்த தேர்வுகளை ஹிந்தியில் எழுதிய 51 நபர்களை தெற்கு ரயில்வே வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. இவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் கோரக்பூர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள். இதர ரயில்வேயில் தேர்வு செய்த பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதம் என்றும் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

‘iPhone 13 வாங்க ஒரு சராசரி இந்தியன் 700 மணிநேரம் உழைக்கனும்’ – நம்ப முடியலையா? அதான் உண்மை!

அதனால் ரயில்வே அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். தெற்கு ரயில்வே செய்துள்ள இந்த செயல் ஜனநாயக அமைப்பினை சீர்குலைப்பதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அதே போல தமிழகத்தை சேர்ந்தவர்களை நியமனம் செய்யாமல் இருந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறி உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. வடக்கத்தியவர்களுக்கு அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு, தெற்கத்தியவர்கள் என்றாலே,என்றுமே இளக்காரம் தான். அதிலும் தமிழன் என்றால் சொல்லவே வேண்டாம். இதற்கு காரணம் ஒரு வகையில் நாம் தான் காரணம். நான் என்றுமே கட்சி மாச்சரியங்களைக் கடந்த,மக்கள் சேவகர்களை,திறமைமிக்க வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதேயில்லை. மக்கள் எப்படியோ,அவ்விதமே அரசுகளும். மற்றைய நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், மக்கள் சேவையில் கட்சியைக் கடந்து செயல்படும் உறுப்பினர்களால்,அம்மாநில மக்கள் உணர்வுகளை மத்தியில் உதாசீனப்படுத்தப் படுவதில்லை. “”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கின் நம் எல்லோருக்குமே தாழ்வு. இந்த உண்மை உணர்வு,என்று நமது மக்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வருமோ,அதுவரை நமக்கு விமோச்சனமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!