ஒரு மணிநேர சிறப்பு எபிசோடாக ‘மௌனராகம்’ சீசன் 2 சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

0
ஒரு மணிநேர சிறப்பு எபிசோடாக 'மௌனராகம்' சீசன் 2 சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
ஒரு மணிநேர சிறப்பு எபிசோடாக 'மௌனராகம்' சீசன் 2 சீரியல் - ப்ரோமோ ரிலீஸ்!
ஒரு மணிநேர சிறப்பு எபிசோடாக ‘மௌனராகம்’ சீசன் 2 சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது ஸ்வாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் விஜய் டிவி ‘மௌனராகம்’ சீசன் 2 சீரியல் இந்த வாரம் சிறப்பு காட்சிகளுடன் தொடர்ந்து ஒரு மணிநேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

மௌனராகம் சீரியல்

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘மௌனராகம்’ சீசன் 2. இதுவரை கிட்டத்தட்ட 300 எபிசோடுகளை தாண்டி வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் இப்போது ஒரு முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதாவது, ‘மௌனராகம்’ 2 சீரியலில் சக்தி தனது அப்பா பற்றிய அனைத்து உண்மைகளையும் வருணின் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு ஏற்காடு வந்து விட்டார். இப்போது சக்தியின் உண்மைக் கதையை கார்த்திக், வருணிடம் கூற அவர் சக்தியை தேடி குற்றாலத்தில் இருக்கும் அவரது மாமா வீட்டுக்கு வருகிறார்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் முதல் பைனலிஸ்ட் இவர் தான் – ரசிகர்கள் உற்சாகம்!

மறுபக்கத்தில் ஷீலாவின் சதி திட்டத்தால் வருணின் அப்பா சக்திக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறார். இதை அறிந்ததும் சக்தி, மல்லிகா அனைவரும் சற்று அதிர்ச்சியாகின்றனர். தொடர்ந்து சக்தி இருக்கும் இடத்தை கார்த்திக் மூலம் அறிந்து கொள்ளும் வருண், சக்தியின் மாமாவை கூட்டிக்கொண்டு தாண்டிக்குடிக்கு வருகிறார். அங்கு வந்து பார்த்தால், வருணின் அப்பா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் விஷயம் வருணுக்கு தெரிய வருகிறது. இதனால் மல்லிகா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் வருணை துரத்தி விடுகின்றனர். ஆனால், சக்தி இல்லாமல் சென்னைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் வருண் அங்கேயே தங்கி விடுகிறார்.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் அவ்வப்போது சக்தியிடம் பேச முயற்சித்து வரும் வருணை சக்தியின் மாமா கண்டிக்கிறார். இந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் சக்தி என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழம்பிப் போகிறார். இந்த சூழலில் வருண் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை சக்தியிடம் சொல்வாரா, சக்திக்கு விவாகரத்து செய்ய நினைக்கும் மல்லிகாவின் மனம் மாறுமா என்ற கதைத்திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘மௌனராகம்’ சீசன் 2 சீரியல் இந்த வாரம் 6.30 மணி முதல் 7.30 மணிவரை ஒரு மணி நேர சிறப்பு எபிசோடாக வெளியாக இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!