நாளை அறிமுகமாகும் மோட்டோரோலா Edge 20 மற்றும் Edge 20 Fusion – அசரவைக்கும் அம்சங்கள்!

0
நாளை அறிமுகமாகும் மோட்டோரோலா Edge 20 மற்றும் Edge 20 Fusion - அசரவைக்கும் அம்சங்கள்!
நாளை அறிமுகமாகும் மோட்டோரோலா Edge 20 மற்றும் Edge 20 Fusion - அசரவைக்கும் அம்சங்கள்!
நாளை அறிமுகமாகும் மோட்டோரோலா Edge 20 மற்றும் Edge 20 Fusion – அசரவைக்கும் அம்சங்கள்!

மோட்டோரோலா நிறுவனத்தின் மொபைலின் இரண்டு புதிய மாடல்கள் நாளை பிளிப்கார்ட் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய அறிமுகம்:

மோட்டோரோலா நிறுவனத்தின் மொபைல்கள் என்றாலே வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கும். எப்போதுமே வாடிக்கையாளர்களை இந்த நிறுவனம் திருப்தி படுத்த தவறியதில்லை. இதனாலேயே இதன் பெயர் இத்தனை ஆண்டுகளாக நீடித்து நிற்கிறது. இந்நிலையில், நாளை இந்திய சந்தையில் இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல் மொபைல் வெளியாக இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன்கள் தான் அவை. வழக்கமான மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன், 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. புதிய மாடலின் அம்சங்களை கீழே காண்போம்.

IND Vs ENG 2nd Test : இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய கோஹ்லி – மகிழ்ச்சியில் ஆரவாரம்!

மோட்டோரோலா எட்ஜ் 20:

108 மெகாபிக்சல், 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் துல்லியதில் மூன்று கேமராக்களை கொண்டு வருகிறது. மேலும், முன்பக்க செல்ஃபி கேமரா 32 மெகாபிக்சலில் வருகிறது. இந்த மாடலில் 30W டர்போ பவர் சார்ஜிங் கொண்ட 4,000mAh பேட்டரி வருகிறது. இரண்டு விதமான வண்ணங்களில் விற்பனைக்கு வரும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 20 தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.44,100-த்திற்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன்:

இந்த மாடலில் 108 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி டீம் ஸ்னாப்பர் கொண்ட மூன்று பின்புற கேமரா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புறம் 32 MP கொண்ட செல்ஃபி கேமரா உடன் வருகிறது. 6.67 அங்குல முழு எச்டி+ (1080×2400 பிக்சல்கள்) 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 10-பிட் வண்ண ஆதரவுடன் AMOLED திரையில் வருகிறது. இந்த மாடலும் இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. குறைந்தபட்சம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் அளவுகளில் வருகிறது.

என்னங்க சார் உங்க சட்டம் பட First Look Poster | Yennanga Sir Unga Sattam First Look

ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. டூயல்-பாண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, ஹெட்போன் ஜாக் மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவற்றுடன் கிடைக்க இருக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் 6 ஜிபி/128 ஜிபி ரூ .21,499 மதிப்பிலும், 8 ஜிபி/128 ஜிபி மாடல் ரூ .23,999 இந்திய மதிப்பிலும் கிடைக்க இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!