தமிழகத்தில் செப்.1 இன்று முதல் அமலாகும் சுங்க சாவடி கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

0
தமிழகத்தில் செப்.1 இன்று முதல் அமலாகும் சுங்க சாவடி கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் அதிருப்தி!
தமிழகத்தில் செப்.1 இன்று முதல் அமலாகும் சுங்க சாவடி கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் அதிருப்தி!தமிழகத்தில் செப்.1 இன்று முதல் அமலாகும் சுங்க சாவடி கட்டண உயர்வு - வாகன ஓட்டிகள் அதிருப்தி!
தமிழகத்தில் செப்.1 இன்று முதல் அமலாகும் சுங்க சாவடி கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் தற்போது சுங்க சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

சுங்க சாவடி கட்டண உயர்வு:

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பராமரிப்பு செலவுகள் அனைத்தும் சுங்கவரி கட்டணத்தின் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசின் விதிகளின் படி, நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைப்பதற்கான கட்டணம் முழுவதுமாக வசூலாகும் காலம் வரை மட்டுமே முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

அதன்பிறகு, அரசு நிர்ணயித்த படி 40 % சாலை பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். மேலும், நாட்டில் உள்ள சுங்க சாவடிகள் இரண்டு குழுவாக பிரித்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரு பிரிவிலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் மற்றொரு பிரிவிலும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு பெற்ற சுங்க சாவடிகளின் பட்டியல் மற்றும் உயர்த்தப்பட்ட கட்டணம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறுதானிய கொள்முதல் இலக்கு இரட்டிப்பு – மத்திய அரசு வலியுறுத்தல்!

அதன்படி, திருச்சி சமயபுரம் சுங்கசாவடி, திருப்பராய்த்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி ஆகிய சுங்க சாவடிகளின் பெயர் பட்டியலில் உள்ளது. அதில், திருச்சி சமயபுரம் டோல்பூத்தில் கார், வேன் ஒரு முறை கட்டணம் ரூ.45லிருந்து 70 ஆகவும், இலகுரக வாகனங்கள் 80ல் இருந்து ரூ.125ஆகவும், டாரஸ், பஸ் கட்டணம் 165ல் இருந்து ரூ.245, கன்டெய்னருக்கு 265ல் இருந்து ரூ.395ஆகவும் கட்டணம் உயர்கிறது. கார், ஜீப்புக்கு வருட கட்டணம் ரூ.1400, இலகு ரக வாகனங்களுக்கு ரூ.2450, பஸ், லாரிகளுக்கு 4905 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!