
இனி வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து துறை மூடல்? அரசின் அதிரடி அறிவிப்பு!
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, மருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிபொருள் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து துறை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய அறிவிப்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வெள்ளிக்கிழமை விடுமுறை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறுகிறார்கள். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. மேலும் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.450-க்கு மேல் விற்கப்படுகிறது. அதுவும் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்து கிடந்தாலும் பெட்ரோல் கிடைப்பதில்லை. எனவே இலங்கையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்கள் ஏராளமானோர் சைக்கிள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் சைக்கிள் கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளதால் சைக்கிள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சைக்கிள்களின் விலை எகிறியது.
Exams Daily Mobile App Download
கடந்த மே மாத தொடக்கத்தில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த 137 பேரை இலங்கை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து துறை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விநியோகத் தடைகள் தொடர்பான பிரச்சினைகளின் விளைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் சுமித் சி.கே.அழகோன் தெரிவித்தார். எனவே, இந்த துறை அதிகாரிகள் பொது மற்றும்/அல்லது தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்காக மத்திய அரசில் காத்திருக்கும் 5012 காலிப்பணியிடங்கள் !
அதன்படி, ஜூன் 27 ஆம் தேதி பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம், வெள்ளிக்கிழமைகளில் மோட்டார் போக்குவரத்து துறை திறப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது. மேலும் வேலை நாட்களில் முற்பகல் 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொலைபேசி எண்கள் மூலம் சேவைகள் தொடர்பான எந்த விளக்கத்திற்கும் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்