Moto நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் – G50 5G மாடல் அறிமுகம்!

0
Moto நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் - G50 5G மாடல் அறிமுகம்!
Moto நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் – G50 5G மாடல் அறிமுகம்!

ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க குறைந்த விலை போன்களை பிரபல நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் Motorola நிறுவனம் குறைந்த விலையில் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Moto G50 5G மாடல்:

கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்கள் தொடர்ந்து குறைவான விலையில் 4ஜி, 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி50 5ஜி மாடல் ஆஸ்திரேலிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

TNEB கேங்மேன் காலிப்பணியிடங்கள் – கால அவகாசம் நீட்டிப்பு!

இந்நிறுவனம் லெனோவாவிற்கு சொந்தமானதால் அதன் லேட்டஸ்ட் மோட்டோ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் மெயின் சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, மீடியா டெக் டைமென்சிட்டி 700 SoC ப்ராசஸர், இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி, சைட்-மவுண்டட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், காண்டாக்ட்லெஸ் பேமண்டகளுக்கு என்எப்சி ஆதரவு, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே போன்ற பிரதான அம்சங்கள் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி 50 5ஜி ஸ்மார்ட்போன்னின் விலை இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.21,500 ஆகும். இது சிங்கிள் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் வருகிறது. மோட்டோ ஜி50 5ஜி ஆனது Meteorite Grey வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி50 5ஜி அம்சங்கள் & விவரங்கள்:

மோட்டோ ஜி 50 5 ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-இன் கீழ் இயங்குகிறது மற்றும் டூயல் சிம் ஸ்லாட்டை கொண்டுள்ளது.

இதில் 6.5-இன்ச் அளவிலான HD+ (720×1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை, 269ppi பிக்சல் டென்சிட்டி, 85 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ, 20: 9 ஸ்க்ரீன் ரேஷியோ மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC மூலம் இயக்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைபிரிட் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வலுயாக (1TB வரை) ஸ்டோரேஜை அதிகப்படுத்தும் வசதி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மோட்டோ ஜி50 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, அதில் எஃப்/1.7 லென்ஸ் கொண்ட 48 மெகாபிக்சல் மெயின் கேமரா + எஃப்/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + எஃப்/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன.

பின்புற கேமரா அமைப்பில் சிங்கிள் எல்இடி ப்ளாஷ் உள்ளது. தவிர இதன் பின்புற கேமரா அமைப்பில் மேக்ரோ வீடியோ, ஸ்லோ மோஷன் வீடியோ, டைம்லேப்ஸ், ஹைப்பர்லேப்ஸ் மற்றும் ஸ்பாட் கலர் ஆகிய மோட்கள் உள்ளன. முன்பக்கத்தில், இந்த போனில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா (f/2.0) உள்ளது.

மோட்டோ G50 5G ஸ்மார்ட்போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது. ஆனால் பாக்ஸின் உள்ளே 10W சார்ஜர் தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் பவர் பட்டனுக்கு கீழே அமைந்துள்ள பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரை, இது USB Type-C port, NFC, Wi-Fi ac, 3.5mm ஆடியோ ஜாக், ப்ளூடூத் v5, GPS, 5G மற்றும் பலவற்றை கொண்டுள்ளது. இந்த போன் அளவீட்டில் இது 167×76.4×9.26 மிமீ மற்றும் எடையில் 206 கிராம் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!