தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் – அரசு அறிக்கை வெளியீடு!

0
தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் - அரசு அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் - அரசு அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் – அரசு அறிக்கை வெளியீடு!

தமிழகம் முழுவதும் சுமார் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பாதிப்பு

தமிழகத்தில் மழை காலம் வந்து விட்டால் வெள்ள நீர் அதிகரித்து பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்ளை தமிழக அரசு மாநில பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (மார்ச் 25) முதல் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

மேலும் அதில் 719 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும், 1,086 இடங்கள் மிதமான பாதிப்பு ஏற்படும் இடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 3 அடி முதல் 5 அடி வரையும், மிதமான பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 2 அடி முதல் 3 அடி வரையும், குறைவான பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 2 அடிக்கும் குறைவாக வெள்ள நீர் தேங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி 317 இடங்கள் மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

அதில் மழை காலம் என்றால் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்சமாக செங்கல்பட்டில் 389 இடங்களும், சென்னையில் 332 இடங்களும், கடலூரில் 293 இடங்களும், நீலகிரியில் 284 இடங்களும், மயிலாடுதுறையில் 228 இடங்களும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!