தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனி காலை உணவு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனி காலை உணவு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனி காலை உணவு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனி காலை உணவு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இதனை நேற்று பட்ஜெட் தாக்கலில் மேயர் தெரிவித்து இருக்கிறார்.

மாணவர்களுக்கு சிற்றுண்டி

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்தது. அந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் 22ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில் மொத்தமாக உள்ள 21 வார்டுகளிலும் மற்றும் மாநகராட்சிகளிலும் ஆளும் அரசு திமுக வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி நகராட்சி பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைப்பற்றியது. உள்ளாட்சி தேர்தலின் போது பலவித கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Post Office இல் பணத்தினை பன்மடங்காக்கும் சிறந்த 8 திட்டங்கள் – பொதுமக்களின் கவனத்திற்க்கு!

திமுக சார்பில் திரு வி க நகர் 74 வது வார்டு உறுப்பினராக பிரியா என்றவர் மேயராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். அவர் நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் புதிய புதிய திட்டங்களுக்கான அறிவிக்கைகளையும் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி நிலவரம் பற்றியும் விரிவாக விளக்கினார். குறிப்பாக தமிழக பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருக்கும் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டிருந்தார்.

அதில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இனி வரும் நாட்களில் பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் கழிப்பறை வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதற்காக 32 க்கும் அதிகமான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் முக்கியமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இனி காலை உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here