தமிழகத்தில் புதிதாக 9,000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

0
தமிழகத்தில் புதிதாக 9,000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் புதிதாக 9,000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் புதிதாக 9,000கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

தற்போது துவங்கி இருக்கும் புதிய கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் 9494 புதிய ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்கள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 13ம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், புதிய ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். அதாவது திருச்சி மாவட்டம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருச்சி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Reliance Jio vs Airtel vs Vi vs BSNL பயனர்கள் கவனத்திற்கு – 30 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். பள்ளிக்கல்வித் துறையை பொறுத்தமட்டில், கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கி இருக்கிறது. மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது.

இதனை மீறி செல்போன் உபயோகிப்பது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். இந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளது. இந்த மாணவர்களுக்கு என்.ஜி.ஓ, காவல்துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகி இருக்கிறது. மேலும், பள்ளிகளில் மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். இதனுடன் அரசுப்பள்ளிகளில் 9,494 புதிய ஆசிரியர்களையும் நியமிக்க இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!