கொரோனாவால் உலகளவில் 65.42 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

0
கொரோனாவால் உலகளவில் 65.42 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனாவால் உலகளவில் 65.42 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனாவால் உலகளவில் 65.42 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.49 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ்:

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கை விதித்தது. மேலும் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாட்டு அரசுகளும் திணறியது. நாளுக்கு நாள் அதிகரித்த பாதிப்புகளால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

மீண்டும் தோன்றியுள்ள மற்றொரு ஆபத்தான வைரஸ் – தடுப்பூசிக்கும் கட்டுப்படாது! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

அதே நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வந்தனர். இதுவரை உலகம் முழுவதும் 6,549,842 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 623,194,703 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து 02,940,122 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39,629 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது வைரஸ் தொற்றை ஒழிக்கும் முயற்சியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த தடுப்பூசியின் பயனாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியுள்ளது. தற்போது 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருவருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,50,621 ஆக அதிகரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!