ஒரே நாளில் 2000க்கும் மேல் உயிர்பலி – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

0
ஒரே நாளில் 2000க்கும் மேல் உயிர்பலி
ஒரே நாளில் 2000க்கும் மேல் உயிர்பலி

ஒரே நாளில் 2000க்கும் மேல் உயிர்பலி – கொரோனவால் அலறும் அமெரிக்கா..!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது,கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கிலும் பரவி வருகிறது. நேற்று மட்டும் அமெரிக்காவில் 2037 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா திணறல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா திணறி வருகிறது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.அமெரிக்காவில் சமூக விலகலை முழுமையாக கடைபிடித்தாலும், கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என்று அந்நாட்டின் தேசிய அலர்ஜி மற்றும் தொற்றுநோய் நிறுவன இயக்குநர் அந்தோனி பாஷி (Fauci) கவலை தெரிவித்துள்ளார்.

36 மாவட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு..!

கொரோனா கோரத்தாண்டவம் & பலி:

கொரோனா வைரஸ் 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 830 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 109 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 687 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here