புதிய நிதியாண்டில் 150க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு – யுனிகாமர்ஸ் அறிவிப்பு!

0
புதிய நிதியாண்டில் 150க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு - யுனிகாமர்ஸ் அறிவிப்பு
புதிய நிதியாண்டில் 150க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு - யுனிகாமர்ஸ் அறிவிப்பு

புதிய நிதியாண்டில் 150க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு – யுனிகாமர்ஸ் அறிவிப்பு!

பிரபல இ காமர்ஸ் வழங்குனரான யுனிகாமர்ஸ் நிறுவனம் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2021-22 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் 150 க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

புதிய பணியமர்த்தல்:

முன்னணி இ காமர்ஸ் நிறுவனமான யுனிகாமர்ஸ் புதிய நிதியாண்டில் தனது நிறுவனத்தை மேலும் 60% விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் இந்நிறுவனம் தற்போது 240 க்கும் அதிகமான ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகளிலும் தனது வளர்ச்சிப் பாதையைத் தொடர விரும்பும் இந்த நிறுவனத்தின் விரிவாக்க முயற்சியில் புதிய பணியாளர்களை அதிகரிக்க விரும்புகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் யூனிகாமர்ஸ் 60 ஊழியர்களை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் வீட்டிற்கே தேடி வரும் கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி முடிவு!

தவிர இன்னும் 250 ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு இணையதளங்கள், மூன்றாம் தரப்பு மனிதவள சேவைகள், தொழில் பக்கங்கள் மற்றும் உள் குறிப்புகள் மூலம் ஆட்சேர்ப்பு பணிகளை நடத்தும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில் மகிஜா கூறுகையில், ‘நாங்கள் வலுவான வளர்ச்சி வேகத்தை தொடரவும், 2022 ஆம் நிதியாண்டுக்கான சர்வதேச விரிவாக்கத்திற்கும் இலக்கு வைத்துள்ளோம். எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை மேம்படுத்தவும், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் எங்கள் வாடிக்கையாளர் தளத்தை வலுப்படுத்தவும் தொடர்ந்து எங்கள் குழுவை விரிவுபடுத்துவோம்.

அரசு வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அந்த வகையில் தனித்து செயல்படும் திறன் கொண்ட நபர்களை நாங்கள் தேடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் 20% இ-காமர்ஸ் பகுதிகளில் யூனிகாமர்ஸ் செயலாக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. தவிர இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தற்போது 150 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 6000 கிடங்குகளை நிர்வகிக்கிறது. தவிர ஆண்டுதோறும் 300 மில்லியன் பரிவர்த்தனைகளை செய்து வருவது கூடுதல் தகவல்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!