தமிழக KV பள்ளிகளில் 12, 000க்கு அதிகமான காலிபணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழக KV பள்ளிகளில் 12, 000க்கு அதிகமான காலிபணியிடங்கள் - அமைச்சர் விளக்கம்!
தமிழக KV பள்ளிகளில் 12, 000க்கு அதிகமான காலிபணியிடங்கள் - அமைச்சர் விளக்கம்!
தமிழக KV பள்ளிகளில் 12, 000க்கு அதிகமான காலிபணியிடங்கள் – அமைச்சர் விளக்கம்!

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 12000 காலியாக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணாதேவி விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகளில் காலிப்பணியிடங்கள்:

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12044 ஆசிரியர் பணியிடங்களும், 1332 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 1,162 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 1,066 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருக்கின்றன என அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

இந்த காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மக்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணாதேவி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12044 ஆசிரியர் பணியிடங்களும், 1332 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக இருக்கிறது.

பணி மாற்றம், பணி ஓய்வு ஆகிய காரணங்களால் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்ச்சியான நடைமுறையாகும். இது குறித்து நியமன விதியின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் பாதிக்காத வகையில் கேந்திரிய வித்யாலயா சங்கடன் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்தி இருக்கிறது. அனைத்து பள்ளிகளிலும் சுமார் 9, 161 ஒப்பந்த ஆசிரியர்கள் நாடு முழுவதும் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!