தமிழக அரசு பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

0
தமிழக அரசு பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழக அரசு பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழக அரசு பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக நிரப்ப கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் அரசின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டது. தற்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த காலிப்பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டு அடிப்படையில் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மரத்தடியில் நடைபெறும் வகுப்பறைகளுக்கு கட்டிடங்கள் கட்டுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு தேவைப்படும் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் அதிகரித்த ஏடிஎம் கட்டணங்கள் – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

மேலும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிகள் சீரமைக்கப்படும். மேலும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு மடிக்கணினி வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் நிதித்துறையிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here