இந்தியாவில் இன்று 5,108 பேருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சி தகவல் வெளியீடு!

0
இந்தியாவில் இன்று 5,108 பேருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சி தகவல் வெளியீடு!
இந்தியாவில் இன்று 5,108 பேருக்கு கொரோனா உறுதி - அதிர்ச்சி தகவல் வெளியீடு!
இந்தியாவில் இன்று 5,108 பேருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சி தகவல் வெளியீடு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை கடந்துள்ளது. இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் கூடுதலான தகவல்களை பார்ப்போம்.

கொரோனா பாதிப்பு நிலவரம்

உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 5,108 பேர் புதியதாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,10,057 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,36,092 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி குணமடைந்தோர் விகிதம் 98.71% ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!

Exams Daily Mobile App Download

இதற்காக பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 19,25,881 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,15,67,06,574 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 45,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி நாட்டில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.10% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!