பெங்களூரு IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்- ஆய்வு தகவல்!

0
பெங்களூரு IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்- ஆய்வு தகவல்!
பெங்களூரு IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்- ஆய்வு தகவல்!
பெங்களூரு IT நிறுவனங்களில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள்- ஆய்வு தகவல்!

இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான தொழில்நுட்ப நிறுவனங்களில் (IT) அதிகரிக்கும் புதிய வேலை வாய்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூரு நகரத்தில் மட்டும் சுமார் 40% வேலைவாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு முடிவு தகவல் அளித்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

கொரோனா தொற்றுக்கு மத்தியில் பல்வேறு தொழில்களும் முடங்கிக்கிடக்க கூடிய சூழலில் IT நிறுவனங்கள் மட்டும் உச்ச வளர்ச்சியடைந்து வருகிறது. அந்த வகையில் சிறிய IT நிறுவனங்கள் துவங்கி, TCS, இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்கள் வரையிலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. மேலும் தகுதியுள்ள பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்க இந்த நிறுவனங்கள் போட்டியிட்டு கொண்டிருக்கின்றன.

ஞாயிற்று கிழமை கடைகள் இயங்க தடை விதிப்பு – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

குறிப்பாக டிஜிட்டல் அல்லது டெக்னாலஜி டிரான்ஸ்பார்மேஷன் சேவைகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் IT நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் 400% வரை உயர்ந்துள்ளதாக ஆய்வுத்தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக BFSI பிரிவு சார்ந்த தொழில்நுட்பத்திற்கு கூடுதல் தேவைகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 3 மாதத்தில் மட்டும் Full Stack டெவலப்பர், ரியாக்ட் JS டெவலப்பர், ஆண்டுராய்டு டெவலப்பர், ஆன்குலார் JS டெவலப்பர், கிளவுட் இன்பரா டெக் டெவலப்பர் ஆகிய பணிகள் வேலைவாய்ப்புகளை அளிப்பதில் முன்னணி இடத்தில் உள்ளன.

தொடர்ந்து கேமிங் பிரிவில் யுனிட்டி டெவலப்பர், டெவாப்ஸ் பிரிவில் பேம்பூ மற்றும் ஜிரா, சேல்ஸ்போர்ஸ் மற்றும் SAP HANA போன்ற தொழில்நுட்பத்திலும் புதிய வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளதாக தரவுகள் கூறுகிறது. இந்நிலையில் IT நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ஒரு முக்கிய நகரமாக பெங்களூரு உருவெடுத்து வருகிறது. இதை தொடர்ந்து ஹைதராபாத், புனே, சென்னை, மும்பை நகரங்களிலும் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலையிழந்து வெறிச்சோடிய திருப்பதி ஏழுமலையான் கோவில் – புரட்டாசி முதல் சனிக்கிழமை!

இதில் குறிப்பாக IT நிறுவனங்களின் மொத்த வேலைவாய்ப்புகளில் கிட்டத்தட்ட 40% பெங்களூரில் மட்டும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ஹைதராபாத் நகரத்தில் 18%, புனே நகரத்தில்18 % என வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. இது தவிர உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கான தேவைகள் ஏற்பட்டுள்ளதால் IT நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்தியாவில் அடுத்த 5 வருடத்திற்கு IT நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளுடன், கூடுதல் சலுகைகளும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!