கதிர் பிரிவால் மன உளைச்சலில் மூர்த்திக்கு வந்த நெஞ்சுவலி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த வாரம்!

0
கதிர் பிரிவால் மன உளைச்சலில் மூர்த்திக்கு வந்த நெஞ்சுவலி -
கதிர் பிரிவால் மன உளைச்சலில் மூர்த்திக்கு வந்த நெஞ்சுவலி - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்த வாரம்!
கதிர் பிரிவால் மன உளைச்சலில் மூர்த்திக்கு வந்த நெஞ்சுவலி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த வாரம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்போது விரிசல் விழுந்துள்ளது. கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அதனால் வருத்தம் தாங்க முடியாமல் மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. அது குறித்து அடுத்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுவாரசியமாக சம்பவங்கள் நடந்துள்ளது. முல்லைக்கு கடன் வாங்கி மருத்துவம் பார்க்க கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு வீட்டு வாசலில் சத்தம் போடுகிறார். அதனால் ஜீவா மீனாவிடம் பணத்தை வாங்கி கொடுக்க அதனால் குடும்பத்தில் பெரிய சண்டை வருகிறது. அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். அதனால் கதிருக்கு அவமானமாக இருக்கிறது. நம்மால் தான் இவ்வளவு பிரச்சனை என்பதால் கதிர் முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

கதிரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

தனம் மூர்த்தி ஜீவா கண்ணன் என அனைவரும் தடுத்தும் கூட கதிர் மனம் மாறவில்லை. தன்மானம் தான் முக்கியம் என்ற முடிவில் கதிர் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். இந்நிலையில் வெளியே சென்ற கதிர் அடுத்து என்ன செய்ய போகிறார் என தெரியாமல் இருக்கிறார். இதற்கிடையே கதிர் வீட்டை விட்டு சென்றதால் தனம் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். எப்படியாவது வீட்டிற்கு கதிர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தனம் இருக்க ஆனால் ஜீவா மனம் உடைந்து அழுகிறார்.

இந்நிலையில் கதிர் வீட்டை விட்டு சென்றால் இனிமேல் உன்னிடம் நாங்க பேசமாட்டோம் என மூர்த்தி சொன்ன பின் கூட கதிர் வெளியே சென்றதால் மூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். நான் இவ்வளவு சொன்ன பின் கூட அவன் கேட்காமல் சென்றுவிட்டான் என்பதால் மூர்த்தி கோவமாக இருக்க அனைவரையும் தூங்க சொல்கிறார். அப்போது மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here