கதிரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
கதிரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கதிரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூர்த்தி - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கதிரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மூர்த்தி – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

தற்போது அண்ணன், தம்பிகளின் பாசப்போராட்ட கதைக்களத்துடன் நகர்ந்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்தபடியாக கதிர் வீட்டை விட்டு சென்ற துக்கம் தாங்க முடியாமல் மூர்த்திக்கு நெஞ்சு வலி வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணன், தம்பிகள் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த இடத்தில் இப்போது ஒரு சில பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், முல்லையின் சிகிச்சைக்காக செலவழித்த பணத்தை பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் சம்பந்திகள் பேசி சண்டையிட இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த கதிர் அதிரடியாக முல்லையை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – லாபம் தரும் சூப்பர் திட்டம்!

இப்போது கதிர், முல்லை இருவரும் வீட்டை விட்டு சென்றதும் இது எதற்காக நடந்தது என்று புரியாமல் வீட்டில் உள்ள அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். கூடுதலாக, கதிர் சென்றதற்கு மீனாவின் அப்பா தான் காரணம் என மீனாவிடம் கோபப்படுகிறார் ஜீவா. ஆனால், என்ன புலம்பினாலும் கதிர் திரும்ப வரப்போவதில்லை என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் கதிர், முல்லை இருவரும் முருகன் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சோகமான கதைக்களத்துடன் பயணித்து கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்தில் கதிரை பற்றி வீட்டில் உள்ளவர்கள் பேசிக்கொண்டிருக்க நான் சொல்வதை கேட்காமல் அவனாக தானே போனான். அவன் எல்லா முடிவையும் எடுத்து விட்டு தானே வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறான். அவனை பார்த்துக்கொள்ள அவனுக்கு தெரியும் என்று கோபப்படுகிறார் மூர்த்தி. இருந்தாலும் கதிரை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் மூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி வருகிறது. இப்போது, இந்த விஷயம் அறிந்து கதிர் வீட்டுக்கு வருவாரா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!