மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு அறிவிப்பு – முதல்வரின் அதிரடி திட்டம்!

0
மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு அறிவிப்பு - முதல்வரின் அதிரடி திட்டம்!

கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து முதல்வருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்த நிலையில் இது குறித்தான முடிவை முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய உயர்வு:

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பணியாற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் வழங்கும் அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொடர்ந்து பலமுறை கோரிக்கைகளை வைத்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய் 500க்கு பதிலாக ரூபாய் 1000 மும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 700 க்கு பதிலாக ரூபாய் 1200 ரூபாயும் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PF பணத்தை ஆன்லைன் & ஆஃப்லைன் மூலம் எப்படி பெறுவது? எளிய வழிமுறைகள் இதோ!

உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது ஒடிசா கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட ஓய்வூதியம் ஆனது பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகையின் காரணமாக வயது முதிர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!