குரங்கு அம்மை வைரஸ் பெயர் மாற்றம் – WHO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத்தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் நோய் உலக நாடுகள் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை என்ற பெயரை மாற்றம் செய்துள்ளது.
பெயர் மாற்றம்:
உலக நாடுகள் கொரோனாவால் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்த நிலையில் குரங்கு அம்மை என்ற வைரஸ் தொற்று மக்களிடையே பரவ ஆரம்பித்தது. முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து பருவ தொடங்கிய இந்த வைரஸ் பிறகு அமெரிக்கா, கனடா,ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த குரங்கு அம்மை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் தடிப்புகள், உடல் சோர்வு தொண்டை வலி,கடுமையான தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்த வைரஸ் குரங்குகளிடமிருந்து பரவுவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1958 ஆம் ஆண்டு டென்மார்க்கில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ஆய்வக குரங்குகளில் இந்த நோய் பரவியது கண்டறியப்பட்டது. அதனால் விஞ்ஞானிகள் இதற்கு குரங்கு அம்மை என்று பெயர் சூட்டினார்கள். இந்த நிலையில் வைரஸ்க்கு வைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.
கோயம்புத்தூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 200+ நிறுவனங்கள்!! 20000 காலிப்பணியிடங்கள்!!
Exams Daily Mobile App Download
இதன் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு குரங்கு அம்மை என்ற வைரஸ் நோய்க்கு ‘எம் பாக்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு குரங்கு அம்மை மற்றும் எம் பாக்ஸ் பெயர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். பிறகு குரங்கு அம்மை என்ற பெயர் படிப்படியாக அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.