தமிழகத்திலும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று? தடுப்பு பணிகள் தீவிரம்!

0
தமிழகத்திலும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று? தடுப்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்திலும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று? தடுப்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்திலும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று? தடுப்பு பணிகள் தீவிரம்!

நாடு முழுவதும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் குரங்கு அம்மைக்கு ஆய்வகம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

குரங்கு அம்மை:

கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் வழக்கமாக 2 முதல் 4 வாரங்கள் வரை பாதிப்பு நீடிக்கும். காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள், நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும் மூச்சு திணறல், பார்வை மங்குதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து விலங்குகளிடம் இருந்தும் பரவி வருகிறது. அதனால் அனைத்து நாடுகளும் தேவையான தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஜூலை 20 முதல் 26 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை? காரணம் இதோ!

மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை வைரஸ் பரவ தொடங்கி விட்டது. தற்போது கேரளாவில் இரண்டு நபருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் குரங்கு அம்மை தடுப்பு பணியாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பன்னாட்டு விமான நிலையம் உள்ள மாவட்டங்களில் குரங்கு அம்மைக்கு என்று தனியாக 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து கோவை , மதுரை , திருச்சி சென்னை அரசு மருத்துவமனைகளில் பிரத்யோகமாக 10 படுக்கைகளுடன் கூடிய குரங்கு அம்மை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிஎம்ஆர் மூலம் குரங்கு அம்மை கண்டறிய 15 ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here