இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று அச்சம் – புதுவை முதல்வர் முக்கிய தகவல்!
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோயும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குரங்கு அம்மை:
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒரு வகையான அம்மை நோயாகும். சின்னம்மை, பெரியம்மை நோய் போல இந்த குரங்கு அம்மை குரங்குகளிடம் இருந்து பரவுவதாக கூறப்படுகிறது. முதலில் ஆப்பிரிக்கா நாட்டிலோ பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள் நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலகின் மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் குரங்கு அம்மை வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. முதலில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயதுள்ள நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியபட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். மற்ற மாநிலங்களை தொடர்ந்து புதுவையிலும் குரங்கு அம்மை தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குரங்கு அம்மை தொற்று குறித்து பேசிய புதுவை முதல்வர் புதுச்சேரி குரங்கு அம்மை நோய் முற்றிலுமாக இல்லை என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை அறிகுறிகள் யாருக்கேனும் தென்பட்டால் அவர்களின் மாதிரிகள் உடனடியாக எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மைக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவில் சிகிச்சை எதுவும் இல்லை என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்