இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்! கொல்லப்படும் குரங்குகள்? உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

0
இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்! கொல்லப்படும் குரங்குகள்? உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்! கொல்லப்படும் குரங்குகள்? உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்! கொல்லப்படும் குரங்குகள்? உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நோயினை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் முயற்சித்து வருகிறது. மேலும் இது குறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குரங்கு அம்மை:

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வந்த கொரோனா பரவல் தற்போது அரசின் தீவிர முயற்சியால் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் குரங்கு அம்மை என்னும் புதிய நோய் பரவல் மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் குரங்கு அம்மை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் தொடங்கி இத்தொற்று 90 நாடுகளில் பரவியுள்ளது. இது வரை 29000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவலை உலக சுகாதார நிறுவனம் உலக அவசர நிலையாக அறிவித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரேசிலில் இதுவரை 1700 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாதா? மத்திய அரசு விளக்கம்

இந்த நிலையில் குரங்கு அம்மை காய்ச்சலுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் குரங்குகளை கொன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு அம்மை நோய்க்கு குரங்குகள் தான் காரணம் என்று மக்கள் குரங்குகளை கொன்று வருவதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இதற்கு காரணம் மக்களின் அறியாமையே என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 4 நகரங்களில் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்டன. கடந்த ஜூலை 29ம் தேதி பிரேசிலில் குரங்கு அம்மை நோயால் ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!