இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் குரங்கு அம்மை தொற்று – அதிர்ச்சியில் மக்கள்!

0
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் குரங்கு அம்மை தொற்று - அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் குரங்கு அம்மை தொற்று - அதிர்ச்சியில் மக்கள்!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் குரங்கு அம்மை தொற்று – அதிர்ச்சியில் மக்கள்!

குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது . இந்த நிலையில் டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பற்றி இப்பதிவில் காண்போம்.

குரங்கு அம்மை:

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் தற்போது தான் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக உலகம் முழுவதும் குரங்கு அம்மை என்னும் நோய் பரவி வருகிறது.
குரங்கு அம்மை நோய் வைரஸால் ஏற்படும் ஒரு அரிய வகை தொற்று நோயாகும். குரங்கு அம்மை நோய் மக்களிடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் நோயானது பரவலாம் என கூறப்படுகிறது. கொரோனாவை போலவே இருமல், தும்மல் போன்றவற்றால் பரவக்கூடிய ஆபத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து இந்த நோய் பரவக் கூடும் என்றும் பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடுவதன் மூலமோ அல்லது விலங்குகளின் திரவங்கள் மூலமோ மனிதர்களுக்கு பரவுகிறது. குறிப்பாக எலி, அணில் போன்றவைகள் மூலம் இந்நோய் பரவுவதாக கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

குரங்கு அம்மை பாதிப்பு 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை தற்போது உலக அளவில் ஒட்டுமொத்த பொது சுகாதார அமைப்புக்கு மிதமான ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குரங்கு அம்மை இந்தியாவில் கேரளா மாநிலத்தில் அதிகம் பரவி வந்த நிலையில் தற்போது அதிக மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் டெல்லியை அடுத்து தெலுங்கானாவில் பரவத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய தகவல்!

தலைநகர் டெல்லியில் 31 வயதான மவுலானா ஆசாத் என்பவருக்கு நேற்று குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை நடத்தி வந்த நிலையில் ஆசாத் கடந்த சில நாட்களாக எந்த ஒரு வெளிநாட்டிற்கும் செல்லவில்லை. இந்த நிலையில் அவருக்கு உள்ளூரிலே தொற்று ஏற்பட்டிருப்பது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒருவருக்கு நேற்று குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ள 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடைய ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!