பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த குரங்கு, சீண்டிய போட்டியாளர்கள் – எச்சரித்த பிக்பாஸ் குரல்!

0
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த குரங்கு, சீண்டிய போட்டியாளர்கள் - எச்சரித்த பிக்பாஸ் குரல்!
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த குரங்கு, சீண்டிய போட்டியாளர்கள் - எச்சரித்த பிக்பாஸ் குரல்!
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த குரங்கு, சீண்டிய போட்டியாளர்கள் – எச்சரித்த பிக்பாஸ் குரல்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 2 வாரம் ஆன நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் குரங்கு நுழைந்துள்ளது. அதனால் போட்டியாளர்கள் அந்த குரங்கை சீண்ட பிக்பாஸ் பாலா மற்றும் ஷாரிக்கை கண்டித்து இருக்கின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது 14 போட்டியாளர்களை கமல் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் சுரேஷ் தாத்தா எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். அதன் படி தற்போது 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் மீண்டும் களமிறங்கி இருப்பதால் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

மேலும் பிக்பாஸ் வீட்டில் பல கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அடித்துக் கொண்டு சண்டை போடவே டாஸ்க் கொடுக்கப்படுவது போல இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் குரங்கு ஒன்று நுழைந்தது. அதை போட்டியாளர்கள் கவனிக்காமல் இருந்ததால் அது எதுவும் செய்யாமல் அப்படியே சென்றது. ஆனால் அந்த குரங்கு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று வந்து இருக்கிறது.

“குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா – ரசிகர்கள் உற்சாகம்!

அதை பார்த்த பாலா மற்றும் ஷாரிக் அந்த குரங்கை சீண்டி பார்க்கின்றனர். டாஸ்க் செய்ய கொடுக்கப்பட்ட போலீஸ் தொப்பி குச்சி போன்றவற்றை தூக்கி எரிந்து அதை வெறுப்பேத்த கடுப்பான பிக்பாஸ் அதை எதுவும் செய்யாமல் இருந்தாலே அது போய்விடும் என சொல்கிறார். ஆனால் மீண்டும் அவர் சொன்னதை கண்டுகொள்ளாமல் பாலா செய்ய கடுப்பான பிக்பாஸ் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here