தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம்? அமைச்சர் விளக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம்? அமைச்சர் விளக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம்? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் பரிசுப்பணம் வழங்கப்படுமா? என்ற பொதுமக்களின் கேள்விக்கு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த ஆண்டும் தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால் பொங்கல் பரிசுப்பணம் வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு!

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் மக்களது குழப்பத்திற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு நலன் தரக்கூடிய பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில் தமிழகத்தை நச்சுக்காற்றுகளற்ற தலைசிறந்த மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் பசுமை போர்வை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்கும் வகையில் அனைத்து பாடப் புத்தகங்களிலும் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Amazon Prime பயனர்களுக்கு ஷாக் அறிவிப்பு – டிச.13 முதல் சந்தா கட்டணம் உயர்வு!

விளை நிலங்கள் மற்றும் விவசாயிகளை காக்கும் விதமாக மலை அடிவார பகுதிகளில் தற்காலிக வாட்ச்மேன் நியமிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கூட்டுறவு வங்கிகளில் 5 ஆயிரம் கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது, வரும் 2022 மார்ச் மாதத்திற்குள் 10 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பொங்கல் தொகுப்புடன் பொங்கல் பரிசுப்பணம் வழங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!