WhatsApp பயனர்களா நீங்கள்? பணம் செலுத்துதல் & பரிமாற்றத்தில் கேஷ்பேக்! புதிய அறிமுகம்!

0
WhatsApp பயனர்களா நீங்கள்? பணம் செலுத்துதல் & பரிமாற்றத்தில் கேஷ்பேக்! புதிய அறிமுகம்!
WhatsApp பயனர்களா நீங்கள்? பணம் செலுத்துதல் & பரிமாற்றத்தில் கேஷ்பேக்! புதிய அறிமுகம்!
WhatsApp பயனர்களா நீங்கள்? பணம் செலுத்துதல் & பரிமாற்றத்தில் கேஷ்பேக்! புதிய அறிமுகம்!

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியாக திகழும் வாட்ஸ்அப், அதன் பணம் செலுத்துதல், இடமாற்றம் ஆகிய சேவைகளில் இந்திய பயனர்களுக்கு கேஷ்பேக் உள்ளிட்ட சில சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேஷ்பேக் சலுகை

இந்தியாவில் உள்ள 100 மில்லியன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் செயலியில் பணம் செலுத்துதல், இடமாற்றம் ஆகியவற்றிற்கு கேஷ்பேக் வெகுமதிகளை வழங்க இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் அதன் பியர்-டு-பியர் பேமெண்ட் சேவைக்கு அதிகமான இந்தியர்களை ஈர்க்கும் வகையில் கேஷ்பேக் வெகுமதிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த சலுகைகளை வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 34% ஆக உயர்வு!

இப்போது வாட்ஸ்அப் நிறுவனம், கூகுள் உள்ளிட்ட சக போட்டியாளர்களுடன் போட்டியிட முயல்வதால் வணிகர்களின் கட்டணங்களுக்கு இதே போன்ற சலுகைகளை சோதனை செய்து வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் தனது கட்டணச் சேவையில் பயனர்கள் செய்யும் பரிமாற்றங்களுக்கு ரூ.33 வரையிலான கேஷ்பேக் சலுகையை மே மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தும். இது மெசஞ்சர் செயலியில் இருந்து ஒருவருக்கொருவர் நிதியை அனுப்ப அனுமதிக்கிறது என்று குறிப்பிட்ட சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் வாட்ஸ்அப்பின் “பயனர் கையகப்படுத்தல் இயக்கம்” என விவரிக்கப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை, மூன்று பரிவர்த்தனைகளுக்கு உரியது. அது ரூ.1 ஆக இருந்தாலும், மாற்றப்படும் தொகையைப் பொருட்படுத்தாமல் சலுகை வழங்கப்படும். இது குறித்த ஒரு அறிக்கையில், வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவதற்கான திறனை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக பயனர்களுக்கு படிப்படியாக கேஷ்பேக் சலுகைகளை வழங்கும் பிரச்சாரத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த கேஷ்பேக் சலுகைகளில் நெடுஞ்சாலை டோல், பில்களை நேரடியாக செலுத்தும் பயனர்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவையும் அடங்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here