தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கவனத்திற்கு – உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கவனத்திற்கு - உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கவனத்திற்கு - உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் கவனத்திற்கு – உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் உச்சம் தொட்டதால், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை இல்லாமல் அவதிப்பட்டனர். மேலும் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கும் ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தாக்கம் குறைந்து அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – PF பேலன்ஸை தெரிந்து கொள்வது எப்படி?

இத்திட்டத்தில் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2022 மாா்ச் 31 அன்று 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற பதிவுதாரா்கள் அனைவரும் தகுதி உடையவா். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்கத் தெரிந்தவா் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்று பதிவு செய்து மாா்ச் 31அன்று ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பயன்தாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது பயிலுபவராக இருக்கக்கூடாது. பொதுப்பிரிவினருக்கு மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சியின்மை ரூ.200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.300, மேல்நிலை வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.400, பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு, எழுதப்படிக்க தெரிந்த, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.600, மேல்நிலை வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.750, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றோருக்கு ரூ.1000 வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள், பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது. தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் பாலாஜி நகா் 2வது குறுக்கு தெரு, பூம்புகார் சாலை, மயிலாடுதுறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து, விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பெற்றலாம். மேலும் விவரங்களுக்கு 04364 299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!