பயணிகளின் தரவுகள் மூலமாக பணமாக்குதல் திட்டம் கைவிடல் – IRCTC விளக்கம்!

0
பயணிகளின் தரவுகள் மூலமாக பணமாக்குதல் திட்டம் கைவிடல் - IRCTC விளக்கம்!
பயணிகளின் தரவுகள் மூலமாக பணமாக்குதல் திட்டம் கைவிடல் - IRCTC விளக்கம்!
பயணிகளின் தரவுகள் மூலமாக பணமாக்குதல் திட்டம் கைவிடல் – IRCTC விளக்கம்!

பயணிகளின் விவரங்கள் மூலமாக பணமாக்குதல் திட்டத்தை தொடங்கவுள்ளதாக IRCTC அறிவித்திருந்த நிலையில் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பயணிகளின் தரவுகள் மூலமாக பணமாக்குதல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

IRCTC தகவல்

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன்(IRCTC) நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தரவு சொத்துக்களை பணமாக்குவதன் மூலமாக ரூ.1000 கோடியை ஈட்டுவதற்கான டெண்டரை வெளியிட்டிருந்தது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக பயணிகளின் பெயர், வயது, மொபைல் எண், பாலினம், முகவரி, மின்னஞ்சல்-ஐடி, பயண வகுப்பு மற்றும் கட்டண முறை ஆகிய அனைத்து விவரங்களும் தனியாருக்கு விற்பனை செய்யப்படும்.

ஆனால், இந்த திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இந்த பயணிகளின் தகவலை வைத்து பயணிகளின் தகவல்கள் சுற்றுலா, தங்குமிடம், நிதி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, காப்பீட்டுத்துறை, சுகாதாரம், உற்பத்தி, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து, ஆற்றல் உருவாக்கம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பலரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பயணிகளின் விவரங்கள் மூலமாக பணமாக்குதல் திட்டம் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் முக்கிய எச்சரிக்கை – மீறினால் கடும் நடவடிக்கை!

மேலும், பயணிகளின் தரவுகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் எனவும், பயணிகளின் விவரங்கள் எதுவும் பணமாக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் விவரங்கள் மூலமாக பணமாக்குதல் திட்டத்தை கைவிட்டதன் தொடர்பாக நேற்று தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவர்க்கும் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!