கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் – பிரதமர் மோடி கருத்து!!

0
கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் - பிரதமர் மோடி கருத்து!!
கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் - பிரதமர் மோடி கருத்து!!

கடந்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் – பிரதமர் மோடி கருத்து!!

சென்னை எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொளி காட்சியின் மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி “கடந்த 6 ஆண்டுகளில் புதியதாக 30 ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.

TN Job “FB  Group” Join Now

பட்டமளிப்பு விழா:

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வெள்ளிவிழா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர்.சுதா சேஷயன் வரவேற்று பேசிய இந்த நிகழ்வில் தமிழக கவர்னரும் பல்கலைக்கழக துணை வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கி பேசினார். மேலும் மருத்துவ ஆராய்ச்சி படிப்பை முடித்த மாணவர்கள் 31 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

தனியார் பள்ளி மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு – பெற்றோர்கள் சாலை மறியல்!!

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்று தலைமை உரையாற்றினார். இவர் தனது உரையில் “எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகளின் ஆட்சியாக இருந்தது. அவர் பெண்களின் கல்வி, முன்னேற்றம், அதிகாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். திருவள்ளுவரின் கூற்றுப்படி நோய்க்கான சிகிச்சை என்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள், மருந்து மற்றும் பராமரிப்பவர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்று பேசினார்.

மேலும் அவர் “கடந்த ஆறு ஆண்டுகளில் புதிதாக 30 ஆயிரம் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது 2014ம் ஆண்டை ஒப்பிடும்போது ஐம்பது சதவீதம் அதிகமாகும். மருத்துவ மேற்படிப்பிபின் எண்ணிக்கையும் 2014ம் ஆண்டை விட 80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதியதாக 24 ஆயிரம் மருத்துவ மேற்படிப்புக்காக இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. தற்போது புதிதாக 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்படுட்டுள்ளது. புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட உள்ள நிலையில் இந்த பணிகளுக்காக மத்திய அரசு 2000 கோடி ரூபாய் அளிக்க உள்ளது” என தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் – மகிழ்ச்சியில் மக்கள்!!

தொடர்ந்து அவர் ” கொரோனா பரவலுக்கு பிறகு மருத்துவர்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது. சிறந்த மருத்துவர்கள் கூட சில நேரங்களில் மருத்துப்பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்களுடன் சகஜமாக பழகுவதில்லை. மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையில் நல்ல உறவு இருந்தால் நோய் சீக்கிரம் குணமாகும். மருத்துவர்கள் தங்கள் உடல்நலத்தை பேண யோகா, உடற்பயிற்சி, தியானம், நடைப்பயிற்சி ஆகியவற்றை செய்ய வேண்டும். மனிதனுக்கு சேவை செய்வது இறைவனுக்கு செய்வதாகும் என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளதை மறக்காமல் இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

தலைமை ஆசிரியர் பணிமாறுதல் எதிரொலி – மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!!

இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர், முதன்மை செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமான சுமார் 22,000 பேர் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களுக்கு அவரவர் படித்த கல்லூரிகள் மூலமாக பட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 34 மருத்துவக்கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!