இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு – பிரதமர் இன்று ஆலோசனை!!

0
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - பிரதமர் இன்று ஆலோசனை!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - பிரதமர் இன்று ஆலோசனை!!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு – பிரதமர் இன்று ஆலோசனை!!

இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று (20-04-2021) மாலை ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோடி ஆலோசனை:

இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் உள்ளது. பல சோதனை கட்டங்களை கடந்த பிறகு கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் இந்த தடுப்பூசிகள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு காய்ச்சல், தலைவலி, மயக்கம், உடல் சோர்வு ஆகிய லேசான பாதிப்புகள் காணப்பட்டது. சிலருக்கு மாரடைப்புகளும் ஏற்பட்டது. இருந்தாலும் இந்தியாவில் செலுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது எனவும், மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 16,480,796 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் மூடல் – டோக்கன் முறையில் மது விற்பனை!!

தற்போது மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் இந்திய பிரதமர் மோடி தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களோடு, இன்று மாலை 6 மணியளவில் காணொளி வழியாக ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்படி இன்று (20-04-2021) நடக்கவுள்ள கூட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடி மருத்துவ வல்லுநர்கள், மருந்து நிறுவனங்களுடன் நேற்று (19-04-2021) ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here