தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

தமிழக அரசு சார்பில் புதிய சூப்பர் திட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

18.06.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வெப்பச்சலனம் காரணமாக 19.06.2021, 20.06.2021 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 21.06.2021 அன்று தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி 21 செமீ, பவானி 12 செமீ, எமெரால்ட் 11 செமீ, சின்னக்கல்லார் 10 செமீ, பந்தலூர் 9 செமீ, வால்பாறை 8 செமீ, சின்கோனா 7 செமீ, பெரியாறு 6 செமீ, ஹாரிசன் எஸ்டேட் 5 செமீ, பாபநாசம் 4 செமீ, தென்காசி 3 செமீ, ஏற்காடு, திண்டிவனம் தலா 2 செமீ, பேச்சிப்பாறை 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

17.06.2021,18.06.2021 ஆகிய தினங்களில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 34-45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 17.06.2021, 18.06.2021 வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.06.2021 முதல் 18.06.2021 அன்று வடக்கு வங்க கடல் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.06.2021 முதல் 19.06.2021 வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 17.06.2021 முதல் 21.06.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!