தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

வட கிழக்கு பருவ காற்றின்‌ காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

10.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பொதுவாக வறண்ட வானிலையும்‌, ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

11.12.2021: கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பொதுவாக வறண்ட வானிலயையும்‌, ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

12.12.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம் – அரசு அறிவிப்பு!!

13.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

14.12.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here