மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் – ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ..!

0
மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ..!
மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ..!

மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் – ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ..!

டிஜிட்டல் சேவைகளிலும், பண பரிவர்தனைகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் மொபைல் வேலெட் சேவைகளில் தற்போது புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக ரிசர்வ் வங்கி புதிய முடிவினை வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மொபைல் வேலெட் :

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சேவைகளிலும், பண பரிவர்தனை பணிகளில் அதிகமாக மொபைல் வேலெட் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் டாக்ஸி புக்கிங், ஆன்லைன் பேமெண்ட் சேவை போன்ற பணிகளில் மிக முக்கிய சேவை பயன்பாடாக மொபைல் வேலெட் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இன்றைய காலகட்டத்தில் அதன் பயன் அதிகரித்து வருவதால் அவற்றில் மாற்றங்களை புகுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதாவது இந்த மொபைல் வேலெட்களை ரிசர்வ் வங்கி ஒரு நிலையான வங்கி கணக்குகளாக மாற்ற முடிவு செய்து சமீபத்தில் அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகள் :
  • ஒரு வாடிக்கையாளர் மொபைல் வேலெட்-ல் இருந்து பணத்தை வங்கிகளுக்கு அனுப்பவும், ஒரு மொபைல் வேலெட்-ல் இருந்து பிற நிறுவனத்தின் மொபைல் வேலெட்-களுக்கு பணம் அனுப்பவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
  • இது வரை 1 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வேலெட், ப்ரீபெய்டு கார்டு போன்ற ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-க்கு இருப்புத் தொகை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதனை தற்போது ரூ.2 லட்சம் வரை உயர்த்தியுள்ளதாக RBI வங்கி அறிவித்து உள்ளது.
  • RTGS மற்றும் NEFT போன்ற பண பரிவர்த்தனை மற்றும் பரிமாற்ற முறையினை பயன்படுத்திக் கொள்ள மொபைல் வேலெட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
  • இந்த மொபைல் வேலெட்டினை பயன்படுத்தி ஏடிஎம் களில் பணம் எடுத்திடவும் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
  • இப்புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் வங்கி கணக்கு திறக்க வேண்டிய தேவை இல்லை. இந்த சேவைகளின் மூலமாகவே அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here