ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றம் செய்தல் – எளிய வழிமுறைகள் இதோ!!

8
ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றம் செய்தல் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றம் செய்தல் - எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார் கார்டில் மொபைல் எண் மாற்றம் செய்தல் – எளிய வழிமுறைகள் இதோ!!

வங்கி கணக்கு, பான் கார்டு போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்வதற்கு ஆன்லைன் வழிமுறைகள் எளிதாகி விட்டது.

ஆதார் கார்டில் திருத்தம்

இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை பல்வேறு சேவைகளுக்கு முக்கியமானதாக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இப்படி இருக்க ஆதார் அட்டையில் போன் நம்பரையோ, முகவரியையோ மாற்ற வேண்டும் என்றால் ஆன்லைன் வழிமுறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை எப்படி மாற்ற முடியும் என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

முதலாவது ஆதார் அட்டையை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் உங்களது மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அதற்காக அருகில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு சென்று உங்கள் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும்.

மொபைல் நம்பர் இல்லாமல் அப்டேட் செய்ய;

  • ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தொலைந்து விட்டால் அருகிலுள்ள ஆதார் மையத்துக்கு செல்லவும்.
  • அங்கு ஆதார் அப்டேட் Formல் பழைய எண்ணுக்கு பதிலாக புதிய எண்ணை நிரப்பவும்.
  • பிறகு உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு அப்டேட் செய்யப்படும்.
  • இதற்காக ஆதார் சேவை மையத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை – CEO அதிரடி நடவடிக்கை!!

முகவரியை அப்டேட் செய்ய;

  • ஆதார் எண்ணில் முகவரியை மாற்றம் செய்ய UIDAI-ன் இணையதளத்தில் லாகின் செய்யவும்.
  • பிறகு ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு OTP வரும்.
  • உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாவிட்டால் வேறு எதையும் மாற்றம் செய்ய இயலாது.
  • முதலாவது UIDAI இணையதள பக்கத்தை லாகின் செய்து வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.
  • பிறகு 16 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மற்றும் லிங்க் வரும்.
  • அந்த லிங்க்கை கிளிக் செய்து Agree கொடுக்க வேண்டும்.
  • பிறகு உங்கள் எண்ணுக்கு OTP வரும்.
  • அதை பதிவு செய்து கேப்சாக் கோடை பதிவு செய்யவும்.
  • பிறகு மொபைல் எண்ணில் வரும் SRN எண்ணை வைத்து முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.
  • மாற்றம் செய்த பிறகு Save செய்து Submit கொடுக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!