ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் – பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சாதனை!

0
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் - பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சாதனை!
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் - பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சாதனை!
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் – பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சாதனை!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் பெற்றுத் தந்து அசத்தி உள்ளார். அவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்:

கொரோனா பரவல் அச்சத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் 2021 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் தங்க பதக்கத்தை சீனா கைப்பற்றியது. இந்நிலையில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார். ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிகளில் பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சீன வீராங்கனை தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

சிறப்பு விருந்தினராக செஃப் தாமு – பாண்டியன் ஸ்டோர்ஸ் வளைகாப்பு நிகழ்ச்சி!

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. இவருக்கு முன்னதாக கர்ணம் மல்லேஸ்வரி 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். மறுபுறம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி 586 புள்ளிகளுடன் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இவர் இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்றுத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here