TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மைனஸ் மார்க் விவரம் வெளியீடு!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - மைனஸ் மார்க் விவரம் வெளியீடு!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - மைனஸ் மார்க் விவரம் வெளியீடு!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மைனஸ் மார்க் விவரம் வெளியீடு!

TNPSC குரூப் 2, 2A மற்றும் குரூப் & VAO தேர்வுகளில் மைனஸ் மார்க் உண்டு என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எதற்காக இந்த மைனஸ் மார்க் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

மைனஸ் மார்க்:

தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளுக்கும் ஏற்ப தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நேரத்தில் அனைத்து வேலைகளையும் ஒரே ஊழியர்கள் செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகினர். இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். அதனால் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய இந்த ஆண்டு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை – 7வது ஊதியக்குழு அறிக்கை!

முதல் கட்டமாக குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அடுத்ததாக கடந்த மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வந்தது. இந்த இரண்டு தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவுகள் முடிவடைந்து தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டம், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது குரூப் 2, 2A மற்றும் குரூப் & VAO தேர்வுகளில் மைனஸ் மார்க் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைனஸ் மதிப்பெண்கள்:

  • தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்றாலோ அல்லது பதிவு எண்ணை தவறாக எழுதி இருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.
  • கேள்விகளுக்கான விடையை சரியாக ‘ஷேடிங்’ செய்யாவிட்டால் 2 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
    Exams Daily Mobile App Download
  • வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தால் 5 மதிப்பெண் குறைக்கப்படும்.
  • கைவிரல் ரேகை வைக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற தேர்வர்கள் அனைவரும் சரியான இடத்தில் ரேகை வைக்க வேண்டும். இல்லையெனில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!