UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டண வசூல்? நிதி அமைச்சகம் விளக்கம்!

0
UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டண வசூல்? நிதி அமைச்சகம் விளக்கம்!
UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டண வசூல்? நிதி அமைச்சகம் விளக்கம்!
UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டண வசூல்? நிதி அமைச்சகம் விளக்கம்!

நாட்டில் இதுவரைக்கும் UPI மூலமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படவில்லை. இந்நிலையில், இதற்கு பிறகு UPI மூலமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் நிதி அமைச்சகம் அதற்கு தகுந்த விளக்கமளித்துள்ளது.

UPI கட்டணம்:

நாட்டில் தொழில்நுட்பங்கள் வளர வளர ஆன்லைன் மூலமான பரிவர்த்தனைகளும் பெருகி கொண்டே செல்கிறது. நாட்டின் எந்த மூலைமுடுக்கிற்கு சென்றாலும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவை மூலமாக பண பரிவர்த்தனை செய்ய முடியும். தற்போது வரைக்கும் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்வதற்கு எந்த கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. ஆனால், இதற்கு பிறகு யுபிஐ மூலமாக பணம் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக சமூக வலை பக்கங்களில் தகவல் பரவியது.

இதனை தொடர்ந்து, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவைகளுக்கு அரசு எந்த கட்டணத்தையும் வசூலிக்காது என நிதி அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரைக்கும் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, யுபிஐ சேவை தொகை அடைப்புக்குறிகளின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ள கட்டணத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம் என RBI அறிவித்துள்ளது. மேலும், UPI கட்டண முறை IMPS கட்டண முறையை போலவே இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நகை வாங்க சரியான நாள் இது தான் – அதிரடியாக குறைந்த தங்க விலை!

கடந்த 2016 ஆம் ஆண்டிற்கு பிறகே பலரும் UPI மூலமாக பரிவர்த்தனைகளை செய்ய துவங்கிவிட்டனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் 6 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் UPI மூலமான பரிவர்த்தனைகளை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி 1, 2020 ஆம் ஆண்டு முதல் UPI மூலமான பண பரிவர்த்தனைகளுக்கு பூஜ்ஜிய கட்டண கட்டமைப்புகளை அரசாங்கம் கட்டாயப்படுத்தியது. இதனால், இனி வரும் காலங்களிலும் UPI மூலமான பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!