ரூ.2,00,000/- ஊதியத்தில் Ph.D பட்டம் பெற்றவர்களுக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய அரசு, கல்வி அமைச்சகம் ஆனது கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Director பணியிடம் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (15.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் எளிமையாக கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய அரசு, கல்வி அமைச்சகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய அரசு, கல்வி அமைச்சகத்தில் காலியாக உள்ள Director பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் Professor ஆக குறைந்தது 7 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 60 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Director பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் 7th CPC ஊதிய அளவின்படி, மாதம் ரூ.2,10,000/- (Fixed) ஊதியமாகவும், இத்துடன் சிறப்பு தொகையாக ரூ.11,250/- மாதம் வழங்கப்படும்.
TNPSC Coaching Center Join Now
- Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்திய அரசு, கல்வி அமைச்சகம் விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (15.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.